headlines

img

அதிவேக ரயில்களும் உண்மை நிலையும்

தமிழ்நாட்டில் புல்லட் ரயில் கொண்டு வரப் படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான விரி வான சாத்தியக் கூறு அறிக்கைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஊடகங்க ளில் செய்தி வந்துள்ளது. சென்னை - பெங்க ளூரு மற்றும் மைசூரு ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த  சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிக முள்ள நாட்டில் ரயில் போக்குவரத்து மிக முக்கிய மானது. அதைக் கருத்தில் கொண்டு ரயில்களை நவீனமயமாக்குதல், வேகத்தை அதிகரித்தல் போன்ற விஷயங்களில்  ரயில்வே கவனம் செலுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலி யுறுத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோரமண் டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 275 பேர் உயிரி ழந்தனர். இதற்கு மனிதத் தவறு என்று கூறி ஒன்றிய அரசு உண்மையை மறைக்கப்பார்த்தது. ஆனால் விசாரணையில் ரயில்பாதைகளில் உரிய பாது காப்பு ஏற்பாடுகளை செய்யாததே விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.

நாடு முழுவதும் தற்போது 22 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த ரயில்கள் 96  கி.மீ. வேகத்தில்தான் இயக் கப்படுகின்றன. காரணம் ரயில்பாதைகள் அவ்வ ளவு பாதுகாப்பாக இல்லை.   முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் துவக்கி வைத்தார். ஆனால் இந்த ரயிலின் வேகம் மணிக்கு 96 கிலோமீட்டர் தான்.  ரயில் பாதைகளை மேம்படுத்தி விபத்து குறித்து முன்கூட்டியே எச்ச ரிக்கும் ‘கவச்’ போன்ற தொழில்நுட்பத்தை அறி முகப்படுத்தி 10 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அனைத்து ரயில்களிலும் அனைத்துப் பாதை களிலும் இந்த வசதி செய்யப்படவில்லை. 

குறிப்பிட்ட சில ரயில்களில் மட்டும் இந்த பாது காப்பு ஏற்பாட்டை சேர்ப்பதால் எந்தப் பயனும் ஏற் படாது.  இந்த தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக, ரேடியோ அலைவரிசை கொண்ட அடையாள சாதனங்கள், ரயில்கள், சிக்னல் அமைப்புகள் மற்றும் ரயில் பாதைகளில் நிறுவப்படவேண்டும். ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலிலும் இரண்டு கவச் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், ரயில் பாதை முழுவதுமாக ரேடியோ-அதிர்வெண் சிக்னல் பொருத்தப்பட்டால் மட்டுமே இந்த அமைப் பால் சரியாக வேலை செய்ய முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் சொல்கிறார்கள். மேலும் ரயில்களின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகையை ஒன்றிய அரசு குறைத்துக்கொண்டே வருகிறது.  

உண்மை நிலை இவ்வாறு இருக்க அதிவேக புல்லட் ரயில் திட்டமே அறிமுகப்படுத்தப்பட்டா லும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்றால் திட்டத்தின் பெயரில் தான் வேகம் இருக்குமே தவிர ரயில்களை இயக்கும் போது இருக்காது. எனவே ரயில்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

;