ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
3:44 மணிநேரம் போராட்டம் : சின்னர் சாம்பியன்
112 ஆண்டுகால பழமையான டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஞாயிறன்று நிறைவுபெற்றது. தொடரின் கடைசி நிகழ்வான ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவ், தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் சின்னரை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3:44 மணிநேரம் போராடி 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்று முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
ரஷ்யாவின் மெத்வதேவ் மூன்றாவது முறையாக இறுதிக்கு முன்னேறி ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் கோப்பையை பறிகொடுத்துள்ளார்.
ரூ.17 கோடி
சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலியின் சின்னர் கோப்பையுடன் ரூ.17 கோடியும, 2-ஆம் இடம்பெற்ற ரஷ்யாவின் மெத்வதேவ் கோப்பையுடன் ரூ.9 கோடியும் பரிசுத்தொகையாக வென்றனர். அரையிறுதியில் வெளி யேறிய வீரர்கள் ரூ.5 கோடியும், காலிறுதியில் வெளியேறிய வீரர்கள் ரூ.3 கோடியும், சுற்று ஆட்டங்களிலும் வெளியேறிய வீரர்களும் கணிசமான பரிசுத்தொகையை பெற்றுச் சென்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவுக்கு இதே பரிசுத்தொகை என்ற நிலையில், இரட்டையர் பிரிவுக்கு பரிசுத்தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற பிரிவு சாம்பியன்கள்
மகளிர் ஒற்றையர் :
சாம்பியன் : சபலென்கா (பெலாரஸ்)
2ஆம் இடம் : ஜெங் (சீனா)
ஆடவர் இரட்டையர் :
சாம்பியன் : போபண்ணா (இந்தியா) -
எப்டன் (ஆஸ்திரேலியா)
2ஆம் இடம் : சிமோனே -
வாவாஸ்சோரி (இத்தாலி)
மகளிர் இரட்டையர் :
சாம்பியன் : ஹெய்ஸ் (தைவான்) -
மெர்டென்ஸ் (பெல்ஜியம்)
2ஆம் இடம் : ஒஸ்டாபென்கா
(லாத்வியா) - எலிஸ் (உக்ரைன்)
கலப்பு இரட்டையர் :
சாம்பியன் : ஹெய்ஸ் (தைவான்) - ஜான் (போலந்து)
2ஆம் இடம் : நீல் (பிரிட்டன்) - டெசியர் (அமெரிக்கா)
கொடியை பறிக்கலாம் : திறமையை பறிக்க முடியாது
பட்டம் வென்று பதிலடி கொடுத்த சபலென்கா
உக்ரைன் மீதான போர் காரணமாக உலக அளவிலான விளையாட்டுத்துறை யில் ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் கொடிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இருநாட்டு கொடிகளும் மைதானம் மற்றும் டிஜிட்டல் ஸ்கோர் போர்டுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தற்போது நிறைவு பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் ரஷ்யா, பெலாரஸ் கொடிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், நீக்கப்பட்ட கொடிகளின் நாட்டைச் சேர்ந்த சபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். உலகளவில் தங்கள் நாட்டின் கொடிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்திற்கு பட்டம் வென்று பதிலடி கொடுத்துள்ளார் சபலென்கா (பெலாரஸ்).