games

img

விளையாட்டு செய்திகள்

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் - 2024
அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்க ளன்று காலை நடைபெற்ற “சூப்பர் 8” சுற்றின் 10ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள் (குரூப் 2) அணிகள் மோதின.

இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிக முக்கியமானது என்ற நிலையில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளி தான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 2 ஓவர்களில் 2 விக் கெட்டுகளை இழந்து 15 ரன்கள் எடுத்து இருந்த பொழுது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு 75 நிமிடங்கள் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில், 17 ஓவர் களில் 123 ரன்கள் எடுக்க வேண்டும் என  தென் ஆப்பிரிக்கா அணிக்கு டக் வொர்த்  லூயிஸ் விதிப்படி வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டன. நிதான அதிரடியுடன் வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி, 16.2 ஓவர்களில் 7 விக் கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி யின் மூலம் “குரூப் 2” பிரிவில் இங்கி லாந்து அணியைப் போல தென் ஆப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

போட்டியை நடத்தும் 
நாடுகள் வெளியேறின

9ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை நடத்தும் நாடுகளான மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா நாடு கள் லீக் சுற்றில் அபார ஆட்டத்தை வெளி ப்படுத்தி “சூப்பர் 8” சுற்றுக்கு முன் னேறின. “சூப்பர் 8” சுற்றின் “குரூப் 2” பிரிவில் இடம்பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா அணிகள் தென்  ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளின் பலம்வாய்ந்த ஆட்டத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.

இன்றுடன் “சூப்பர் 8” சுற்று ஆட்டம் நிறைவு

கடந்த ஒரு வார காலமாக நடை பெற்று வந்த “சூப்பர் 8” சுற்று செவ்வா யன்றோடு நிறைவு பெறுகிறது. கடைசி  “சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ் தான் - வங்கதேசம் அணிகள் மோது கின்றன. இந்த ஆட்டம் நிறைவுபெற்ற பின், ஒருநாள் விடுமுறைக்கு பிறகு ஜூன் 27 அன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

களத்தில் இன்று....

உலகக்கோப்பை டி-20 
ஆப்கானிஸ்தான் - வங்கதேசம்
இடம் : வின்சென்ட், 
மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி

பிரான்ஸ் - போலந்து
நேரம் : இரவு 9:30 மணி
இடம் : டார்ட்மண்ட், ஜெர்மனி
*
நெதர்லாந்து-ஆஸ்திரியா
நேரம் : இரவு 9:30 மணி
இடம் : பெர்லின், ஜெர்மனி
*
டென்மார்க் - செர்பியா
நேரம் : செவ்வாயன்று நள்ளிரவு 12:30 மணி
இடம் : மூனிச், ஜெர்மனி
*
இங்கிலாந்து-ஸ்லோவேனியா
நேரம் : செவ்வாயன்று நள்ளிரவு 12:30 மணி
இடம் : லின்டேந்தல், ஜெர்மனி
கோபா - 2024
பிரேசில் - கோஸ்டாரிகா 
நேரம் : காலை 6:30 மணி
இடம் : கலிபோர்னியா, அமெரிக்கா
*
பெரு - கனடா
நேரம் : புதனன்று அதிகாலை 3:30 மணி
இடம் : கன்சாஸ், அமெரிக்கா
சேனல் : பிபா சேனல்

ஐரோப்பிய கால்பந்து - 2024
ஹங்கேரி அபாரம் : ஜெர்மனி திணறல்

ஐரோப்பிய கால்பந்து தொடரில் திங்களன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் (25ஆவது லீக் ஆட்டம்) ஜெர்மனி - சுவிட்சர் லாந்து (“குரூப் ஏ”) அணி கள் மோதின. சுவிட்சர் லாந்து அணியை விட ஜெர்  மனி வலுவான அணி  என்ற நிலையில், இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் நிறை வடைந்தது. 

இரண்டாவது ஆட்டத்தில் (26ஆவது லீக் ஆட்டம்) ஹங்கேரி - ஸ்காட்லாந்து (“குரூப் ஏ”) அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் ஹங்கேரி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில், இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஹங்கேரி அபார வெற்றி பெற்றது.

கோபா அமெரிக்கா -2024
அமெரிக்கா, உருகுவே அணிகள் வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா தொடரில் திங்களன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் (5ஆவது லீக்) அமெரிக்கா - பொலிவியா (குரூப் - சி) அணிகள் மோதிய நிலையில், இந்த ஆட்டத்தில் அமெ ரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அதேபோல 2ஆவது ஆட்டத்தில் (6ஆவது லீக்) பனாமா - உருகுவே (குரூப் - சி) அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உருகுவே 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
 


 

;