games

img

விளையாட்டு செய்திகள்

இந்தியாவில் ஒளிபரப்பு இல்லை

கோபா அமெரிக்கா தொடருக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?

உலகக்கோப்பை, ஐரோப் பிய கோப்பை தொட ருக்கு பிறகு மிகப்பெரிய கால்பந்து தொடராக கருதப்படுவது கோபா அமெரிக்கா தொடராகும். வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்க ளில் உள்ள நாடுகள் பங்கேற்கும் இந்த கோபா அமெரிக்க தொடர் 4 ஆண்டு களுக்கு ஒருமுறை (தோராயமாக) நடைபெறும் நிலையில், 48ஆவது கோபா அமெரிக்கா தொடர் ஜூன் 21 அன்று தொடங்கியது. 

பிரபல தொடராக இருப்பதால் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கள் உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தி யாவில் இந்த தொடர் பற்றி சாதாரண பேச்சுக் கூட இல்லாமல் உள்ளது. கார ணம் கோபா அமெரிக்கா தொடர் இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. அதிகாலை 3:30 மணிக்கு போட்டிகள் தொடங்குவதால், கோபா அமெரிக்கா தொடரை ஒப்பந்தம் செய்ய இந்திய துணைக் கண்டத்தை சார்ந்த ஒளிபரப்பு நிறுவ னங்கள் முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பார்க்கிறார்களோ? இல்லையோ? ஒளிபரப்ப வேண்டியது கடமை. 

உலகில் முதன்மையான விளை யாட்டு கட்டமைப்பை கொண்ட இந்தியாவில் கோபா அமெரிக்கா தொடருக்கு மட்டும் ஒளிபரப்பு பாகு பாட்டை வெளிப்படுத்துவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோபா  அமெரிக்கா தொடரை காண வேண்டு மானால் சர்வதேச கால்பந்து சம்மேள னத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சேனலில் காணலாம். இதற்கு தனிக் கட்டணம் உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

பெரு - சிலி ஆட்டம் டிரா

சனியன்று அதிகாலை நடை பெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் பெரு - சிலி (குரூப் - ஏ) அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கோலடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டனர். இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 

களத்தில் இன்று....

உலகக்கோப்பை டி-20 
ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா
இடம் : வின்சன்ட், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி
*
இங்கிலாந்து - அமெரிக்கா
இடம் : பார்படாஸ், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 8:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)

கோபா - 2024
மெக்சிகோ - ஜமைக்கா
நேரம் : காலை 6:30 மணி
இடம் : ஹூஸ்டன், அமெரிக்கா
*
அமெரிக்கா - பொலிவியா
நேரம் : திங்களன்று அதிகாலை 3:30 மணி
இடம் : டெக்ஸாஸ், அமெரிக்கா
சேனல் : பிபா சேனல்

யூரோ - 2024
இன்று விடுமுறை
திங்களன்று தொடர்ந்து 
லீக் ஆட்டங்கள் நடைபெறும்

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் - 2024

மேற்கு இந்தியத் தீவுகள் அபாரம்