பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு போட்டி களின் போது காயம்படுவது மிகவும் சாதா ரணமான விஷயம் தான். அதுவும் கால்பந்தாட்டப் போட்டிகள் என்றால் கேட்கவே வேண்டாம். காயம் எந்த விதத்தில் ஏற்படும் என்று சொல்ல முடியாது. எலும்பு முறிவில் இருந்து கால்கள், கைகள் இரண்டாக உடையும் அளவிற்கு கூட படுகாயம் ஏற்படும். அந்தளவுக்கு மிகவும் மோசமான விளையாட்டு கால்பந்து. மற்ற விளையாட்டுகளில் காயம் குணமாக வாரக்கணக்கு, மாத கணக்கு என முடியும். ஆனால் கால்பந்து விளையாட்டில் வருடக் கணக்கில் கூட காயம் சரியாகாமல் இருக்கலாம். இதனால் கால்பந்து விளை யாட்டில் காயம் என்பது ஒரு முக்கிய பார்ம் பிரச்சனையாக கருதப்படுகிறது. தற்போது 22-வது சீசன் உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில், உலகக்கோப்பையில் பங்கேற்கும் நாடுகள் தங்களின் அணி வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டிய நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஆனால் பல்வேறு நாடுகள் தங்களது அணியின் முக்கிய நட்சத்திர வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதால் என்ன செய்வது என்று புறியாமல் கடும் சிக்கலை எதிர்கொண்டு விழித்து வருகின்றனர்.
இதில் மேலும் ஒரு சிக்கல் உள்ளது. பல நாடுகளின் வீரர்கள் காயத்தால் முடங்கியுள்ள நிலையில், இன்னும் கிளப் ஆட்டங்கள் நிறைவு பெறவில்லை. நவம்பர் 20-ஆம் தேதி உலகக்கோப்பை தொடங்கும் நிலையில், நவம்பர் 13-ஆம் தேதி வரை ஐரோப்பிய கிளப் கால்பந்தாட்டப் போட்டிகள் உள்ளது. காயம் அடையாத வீரர்கள் நவம்பர் 13-ஆம் தேதி வரை காயம் இல்லாமல் கிளப் போட்டி களில் விளையாடி வருவார்களா? இல்லை அவர்களும் காயத்துடன் முடங்கு வார்களா? என உலகக்கோப்பையில் பங்கேற்கும் நாடுகள் இன்னும் கலக்கத்தில் உள்ளது.
தற்போதைய நிலையில் காயத்தால் அவதிப்படும் வீரர்கள்:
1.உலகச் சாம்பியனான பிரான்ஸ் அணியின் நடுகளவீரர் என்கோலா கான் காயத்தால் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்கோலா மற்றும் பால் போக்பா ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால்தான் கடந்தமுறை பிரான்ஸ் கோப்பையை வென்றது. பல ஆண்டு களாக இவர்கள் இருவரும் அணியின் நடுகளத்தில் இணைந்து விளையாடு பவர்களாவார்கள். என்கோலா கான் இல்லாதது பிரான்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவுதான் என்பதில் ஐயமில்லை.
2.இங்கிலாந்து அணியின் பின்கள வீரர் ரீஸே ஜேம்ஸ், நடுகள மற்றும் பின்கள வீரர் கால்வின் பிலிப்ஸ் ஆகியோர் காயத் தால் உலகக் கோப்பை போட்டிகளில் விளை யாட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
3.போர்ச்சுக்கல் அணியைப் பொறுத்தவரை கிறிஸ்டியானோ ரொனால் டோவிற்கு இணையாக கோல் அடிக்கும் பொறுப்புள்ள தியாகோ ஜோட்டா காயத்தால் வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பெரும் பலவீனமான சூழலை உருவாக்கும். மேலும் முன்கள வீரர் பெட்ரோ நெட்டோ, எதிர்ப்பு ஆட்டத்தில் கெட்டிக்காரரான பெபே ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
4.அர்ஜென்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா, பவ்லோ டிபாலா ஆகியோர் காயம்பட்டிருந்தாலும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக குணமாகி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தகவல் வெளியாகியுள்ளது.
5.பிரேசில் வீரர் ஆர்தர் மெலோ, நெதர்லாந்தின் ஜோர்ஜினியோ வைநால்தம் ஆகியோர் காயம் காரண மாக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழக்கின்றனர்.
முதலில் ஜப்பான்...
உலகக்கோப்பை நடைபெறும் கத்தாருக்கு முதல் அணியாக ஜப்பான் செல்கிறது. நவம்வர் 7 அன்று ஜப்பான் அணி கத்தாருக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தனது முதல் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை எதிர்கொள்கிறது. ஜப்பானின் மற்ற இரண்டு எதிரணிகள் (லீக் சுற்று அணிகள்) ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகும்.