games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

முதலிடத்துக்கு முன்னேறுமா இந்தியா?
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உல கக்கோப்பை நடுக்கட்டத்தைத் தாண்டியுள்ள நிலையில், ஞாயிறன்று நடைபெறும் 29-ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தான் விளை யாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியை சந்திக்காமல் புள்ளி பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது இந்திய அணி. ஆனால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி கடுமை யான பார்ம் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நிலையில், இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4-இல் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்தில் உள்ளது இங்கிலாந்து.  இனி வரும் ஆட்டங்களில் தோல்வியை ருசிக்காமல் அனை த்து ஆட்டங்களிலும் (4) வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்புக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை யில் இங்கிலாந்து அணி உள்ளது. இதனால் இந்திய அணியை  வீழ்த்தி வெற்றியோடு பார்ம் பிரச்சனையை தீர்த்து அரையிறு திக்கு முன்னேறும் முனைப்பில் இங்கிலாந்து அணி கள மிறங்குகிறது. மறுபக்கம் 6-ஆவது வெற்றியுடன் முத லிடத்துக்கும் முன்னேறும் முனைப்பில் இந்திய அணி கள மிறங்குகிறது. இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து
நேரம் : மதியம் 2:00 மணி
இடம் : ஏக்கானா மைதானம், லக்னோ, உ.பி.,

நிறைவு பெற்றது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி - 2023
100 பதக்கங்களுக்கு மேல் வென்று  புதிய வரலாறு படைத்த இந்தியா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி தொடரின் 4-ஆவது சீசன் கடந்த அக்., 22 அன்று சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கி யது. இந்த தொடரின் கடைசி நாளான சனியன்றும் இந்திய வீரர் - வீராங்கனை கள் பதக்க வேட்டை நிகழ்த்திய நிலையில், ஆசிய பாரா விளையாட்டுத் தொடரில் இதுவரை இல்லாத அளவில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என 111 பதக்கங்களை வென்று தனக்குள் புதிய வரலாறு படைத்து பதக்கப் பட்டியலில் 5-ஆவது இடத்தை பிடித்தது. பதக்கப் பட்டியலில் போட்டியை நடத்திய சீனா 214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம் என மொத்தம் 521 பதக்கங்களை குவித்தது. 

செஸ் பிரிவில்  இந்தியர்கள் கலக்கல்

செஸ் : ஆடவர் செஸ் பிரிவில் (பி1) அபாரமாக விளையாடிய இந்திய வீரர் தர்பன் இனானி தங்கப்பதக்கம் வென்ற நிலையில், இதே  பிரிவில் பிரதான் வெள்ளிப்பதக்கமும், அஸ்வின் வெண்கலப்பதக்கமும் வென்றார். இதே போல ஆடவர் அணி பிரிவில் தர்பன், பிரதான், அஸ்வின் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.  ஆடவர் தனிநபர் பிரிவில் (பி2) இந்தியாவின் கிஷான் வெண் கலப்பதக்கம் வென்றார். மகளிர் அணி பிரிவில் (பி1) சன்ஸ்கிருதி, ஹிமான்ஷி, விருதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஆடவர் அணி பிரிவில் (பி2) ஆர்யன், கிஷான், சோமந்ரா ஆகி யோர் அடங்கிய இந்திய அணியும் வெண்கலப்பதக்கம் வென்றது. 

தடகளம் : 
ஓட்டப்பந்தயம் : ஆடவர் 400 மீ ஓட்டப்பந்த
யத்தில் (டி47) இந்திய வீரர் திலீப் தங்கப்பதக்கம் வென்றார்.
ஈட்டி எறிதல் : ஆடவர் பிரிவில் (எப்55) பிரிவில் இந்திய வீரர் நீரஜ் யாதவ் தங்கப்பதக்கமும், டேக் சந்த் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 
மகளிர் 1500 மீ ஒட்டப்பந்தயத்தில் (டி20) இந்திய வீராங்கனை பூஜா வெண்கலப்பதக்கம் வென்றார். 

(மேற்குறிப்பிட்ட அனைத்து நிகழ்வுகளும் - மதியம் 3 மணி நிலவரப்படி)