3 டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வியாழனன்று நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-ஆவது டி-20 போட்டி ஞாயிறன்று இந்தூரில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.