games

img

விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் சூழல் இல்லா பகுதியாக மாறுகிறதாஆஸ்திரேலியா?

ஆஸ்திரேலியா நாடு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. அடித்தால் கொடூர வெயில், மழை பெய்தால் கடலை மிஞ்சும் அளவிற்கு வெள்ளம்,  பனி தெரியாவிட்டாலும் உடல் விரைத்து போகும் அளவிற்கு குளிர் என பல்வேறு இடரை சந்தித்து வருகின்றனர் ஆஸ்திரேலிய மக்கள். 

வருமானத்தில் கைவைக்கும் காலநிலை

இப்படி மாறுபட்ட காலநிலையால் மக்கள் ஒருபக்கம் பாதிப்பை எதிர் கொண்டு வரும் நிலையில், நாட்டிற்கு வரக்கூடிய வருமானத்திலும் கால நிலை கைவைத்துள்ளது. மக்கள் தொகையில் 60% பல்வேறு விளை யாட்டில் ஆர்வமாக இருப்பதால் ஆஸ் திரேலியா நாடு 30% வருமானத்தை விளையாட்டின் மூலம் ஈட்டி வருகிறது. விளையாட்டு ஸ்டோர்கள், ஆன்லைன் கேம்கள் என அனைத்திலும் தனி ஷாப்பிங் வருமானம் உள்ளது. இந்தி யாவில் மக்கள் பொழுது போக்கிற்கு  சுற்றுலா, சினிமா என செல்வார்கள். ஆனால் விளையாட்டு மைதானம் ஆஸ்திரேலியர்களின் பொழுது போக்கு இடமாகும். கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து என அனைத்து விளையாட்டுகளையும் தவறவிடமாட்டார்கள். கடன் வாங்கி யாவது மைதானம் சென்றுவிடுவார்கள்.

கிளைமேக்ஸை மாற்றிய காலநிலை

விளையாட்டிற்கும் - ஆஸ்திரேலியர்களுக்கும் பிரம்மாண்ட கிளைமேக்ஸ் உள்ள நிலையில், காலநிலை மாற்றம் கிடைத்த இடைவெளியில் உள்ளே புகுந்த ஆஸ்திரேலிய விளை யாட்டு உலகில் தனியாக ஒரு  கிளை மேக்ஸை உருவாக்கியுள்ளது. அந்த கிளைமேக்ஸ் யாதெனில் இனி ஆஸ்தி ரேலியாவில் வெளியரங்க போட்டி களை நடத்த முடியாத சூழல் ஏற் பட்டுள்ளதுதான். இந்த கிளைமேக்ஸ் கணிப்புக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது சமீபத்தில் நிறைவு பெற்ற டி-20 உலகக்கோப்பைதான். கால நிலை மாற்ற மழையால் டி-20 உல கக்கோப்பை கடுமையாக பாதிக்கப் பட்டு, ரசிகர்களின் வெறுப்பை சம்பா தித்து, கிரிக்கெட் உலகக்கோப்பைக் கான சுவாரஸ்யத்தை இழந்து நிறைவு  பெற்றது. அப்பொழுதே ஆஸ்திரே லியா விளையாட்டு உலகம் தொடர் பாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. 

மதிய நேரம் இரவானது

அதன் பின்பு காலநிலை மாற்றம் சற்று ஓய்வு எடுத்த நிலையில், 2 மாத இடைவெளியில் தற்போது மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. முதல்  அடியாக ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா தொடரின் கடைசி டெஸ்டை கையில் எடுத்து கிரிக்கெட் உலகில் இதுவரை இல்லாத வகை யில் வித்தியாசமான பதற்றத்தை ஏற்படு த்தியது. கடைசி டெஸ்டின் முதல்  நாளில் ஆஸ்திரேலிய நேரப்படி மதிய நேரத்திலேயே மேகமூட்டத்தால் வானம் இருண்டது. இதனால் முதல்  நாள் ஆட்டம் போதிய வெளிச்ச மின்மையால் ரத்து செய்யப்பட்டது. மழை மேகத்தால் மாலை 5 மணியள வில் வானம் இருட்டாகலாம். ஆனால் சூரியன் உச்சத்தில் நிற்கும் மதிய நேரத்தில் எப்படி வானம் இருட்டாகும். இதுதான் காலநிலை மாற்றத்தின் புதிய சர்ச்சை. இதே நிலை தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் இனி வெளியரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடியாத சூழல் உருவாகலாம்.

கலக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன்டென்னிஸ்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியை  நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா தன் வசம் வைத்துள்ளது. நடப்பாண்டிற்கான 111-வது சீசன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் ஜனவரி 16-ஆம் தேதி அன்று தொடங்கு கிறது. மொத்தம் ரூ.603 கோடி செலவில் நடத்தப்படும் இந்த தொடர் மெல்போர்ன் நகரில் வெளியரங்கில் நடத்தப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவில் மந்தமான வானிலை நிலவுவதால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் நிலைமை என்னவாகும் என டென்னிஸ் வீரர்கள், ரசிகர்கள், சர்வதேச டென்னிஸ் சம்மேளனம், போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய சம்மேளனம் என பல்வேறு தரப்பினரும் ஒருவித கலக்கத்தில் உள்ளனர்.

உள்ளரங்கிற்கு மாற்ற முடியுமா?

பேட்மிண்டன், தடகளம், கபடி, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளை உள்ளரங்கில் நடத்தலாம். ஆனால் கிரிக்கெட், டென்னிஸ் (வாய்ப்பு இருந்தாலும் சுவாரஸ்யம் இருக்காது), கால்பந்து, பேஸ்பால் போன்ற போட்டிகளை நடத்த முடியாது. காரணம் பந்து கட்டுப்பாடின்றி எப்படி வேண்டுமானாலும் பறக்கும். அதனால் உள்ளரங்கில் நடத்த முடியாது. கால்பந்து விளையாட்டிற்கு மழை, பனி, வெயில் போன்ற இடர்பாடுகள் பாதிக்காது என்றாலும், தொடர் மழையால் ஆட்டம் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.