டபிள்யு.பி.எல் தொடருக்கும் பெருகும் ரசிகர்கள் ஆதரவு
இந்தியாவில் ஆடவருக்கு ஐபிஎல் தொடர் நடத்தப்படு வதை போல மகளிருக்கும் டபிள்யு.பி.எல் (Women’s Premier League) என்ற பெயரில் கடந்தாண்டு முதல் டி-20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
முதல் சீசனில் மும்பை இந்தி யன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இரண்டாவது சீசன் பிப்ரவரி 23 அன்று தொடங்கி யது. தில்லி, குஜராத், மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம் ஆகிய 5 நகரங்களின் பெயர்களில் அணிகள் களமிறங்கியுள்ள நிலை யில், இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
டபிள்யு.பி.எல் தொடரின் முதல் சீசனுக்கு அவ்வளவாக ரசிகர்கள் ஆதரவு கிடைக்கவில்லை. அதாவது 40% முதல் 50% மைதான இருக்கை களே மைதானத்தில் நிரம்பின. டிக்கெட் வருவாயும் போதுமான அளவிற்கு வரவில்லை என தகவல் வெளியாகியது.
இந்நிலையில், தற்போது நடை பெற்று வரும் இரண்டாவது சீசனில் டபிள்யு.பி.எல் தொடருக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட அளவில் ஆதரவு அளித்துள்ளனர். இதுவரை நடை பெற்ற 10 ஆட்டங்களுக்கும் 70% முதல் 85% ரசிகர்கள் மைதானத்தில் நேரடி யாக போட்டியை கண்டுகளித்தனர்.
இதே நிகழ்வு தொடர்ந்தால் வரும் காலங்களில் ஆடவர் ஐபிஎல் தொடர் போல மகளிர் தொடரும் நல்ல நிலைக்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி தில்லியில்...
லீக் ஆட்டங்கள் இரண்டு கட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கர்நாடக தலைநகர் பெங்களூரில் திங்களன்று நிறைவு பெற்ற நிலையில், இரண்டாம் கட்டம் செவ்வாயன்று (12-ஆவது லீக் ஆட்டம் முதல்) முதல் தேசிய தலைநகர் மண்டலமான தில்லியில் நடைபெற உள்ளது. இனி இறுதி ஆட்டங்கள் வரை தில்லியிலேயே நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டம்
தில்லி - மும்பை
(12-ஆவது லீக் ஆட்டம்)
நேரம் : மாலை 7:30 மணி
இடம் : தில்லி மைதானம்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி)
ஐபிஎல் 2024 ஹைதராபாத் கேப்டனாக கம்மின்ஸ்?
iஐபிஎல் தொட ரில் முக்கிய நட்சத்திர அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 2016இல் சாம்பி யன் பட்டம் வென்றது. அதன்பிறகு பெரியளவு அந்த அணி சோபிக்க வில்லை. கடந்த சீசனில் மிகமோச மான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹை தராபாத் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து சொதப்பி யது. கடந்த முறையை போன்று நடப்பு சீசனிலும் சொதப்பல் சம்பவங்கள் அரங்கேறக் கூடாது என்பதற்காக ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பை பெற்றுக் கொடுத்த அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸை ரூ.20.6 கோடி கொடுத்து வாங்கி, தற்போது அவரையே கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. தற் போது ஹைதராபாத் அணியின் கேப்ட னாக தென் ஆப்பிரிக்காவின் மார்கிராம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 விளையாட்டு அணிகளை கைவசம் வைத்துள்ள அதானி
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், உலகின் பிரபல தொழிலதிபருமான அதானி தற்போது உலகளவிலான பணக்காரர்களின் பட்டியலில் 17-ஆவது இடத்தில் உள்ளார். 2013 ஆம் ஆண்டில் உலகளவிலான பணக் காரர்களின் பட்டியலில் 600க்கும் மேல் இருந்த அதானி, மோடி பிரதமர் ஆன பின் டாப் 10க்கு முன்னேறினார். எனினும் ஹிண்டன்பர்க் அறிக்கை யால் அதானியின் மோசடி வெளியுல கில் உடைய, 17-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
பெட்ரோல், நிலக்கரி, கட்டுமானம் உள்ளிட்ட எண்ணற்ற துறையில் கல்லா கட்டி வரும் அதானி தற்போது 84 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கைவசம் வைத்துள்ள நிலையில், கொரோனாவிற்கு பிறகு விளையாட்டு உலகிலும் காலடி வைத்தார். தற்போது 6 விளையாட்டு அணிகளை கைவசம் வைத்துள்ள அதானி, உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அள விலும் விளையாட்டு அணி களையும் வாங்கி அதன் மூலம் தனிவருவாயை (விளம்பரம் மூலம்) பெற்று வருகிறார். பிரத மர் மோடி மீண்டும் பிரதமரானால் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரிய மான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) கூட அதானி விலைக்கு வாங்கும் நிலைமை உரு வாகலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதானிக்குச் சொந்தமான அணிகள்
1. குஜராத் ஜெயண்ட்ஸ் - புரோ கபடி அணி
2. குஜராத் ஜெயண்ட்ஸ் - டபிள்யு.பி.எல் கிரிக்கெட் அணி
3. குல்ப் ஜெயண்ட்ஸ் - துபாய் டி-20 கிரிக்கெட் லீக்
4. குஜராத் ஜெயண்ட்ஸ் - லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அணி
5. குஜராத் ஜெயண்ட்ஸ் - பிக் பவுட் குத்துச்சண்டை அணி
6. குஜராத் ஜெயண்ட்ஸ் - கோகோ கோகோ அணி