இளம் வீரர்களின் அதிரடிக்கு ஒரே காரணம் மாறுபட்ட ஆட்டத்திறன் தான். சீனியர் வீரர்கள் ஒரே மாதிரியான அதாவது ஆட்டத்திறனை மாற்றாமல் தொடக்க பயிற்சிகளில் எப்படி ஆடினார்களோ அதே மாதிரி போராடி வெற்றியை ருசிக்கிறார்கள். ஆனால் இளம் வீரர்கள் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு போட்டியாளர் களுக்கும் இடையே வலுவான ஆட்டத்திறனை புத்திக்கூர்மை யுடன் மாற்றுகிறார்கள். சீனியர் வீரர்கள் சர்வீஸ்களில் அதிக அனுபவம் பெற்றிருப்பார்கள். அதனால் அவர்களது சர்வீஸை தாக்குபிடிப்பது கடினம் என்ற வாக்கியங்கள் எல்லாம் தற்காலத்தில் மாறிவிட்டன. அவர்கள் எவ்வளவு வேகத்தில் சர்வீஸ் போட்டாலும் சர்வசாதாரணமாக திருப்பி விடுகிறார்கள். குறிப்பாக இளம் வீரர்கள் சராசரியாக 230 கிமீ வேகத்திற்கும் அதிகமாக சர்வீஸில் மிரட்டுவது சீனியர் வீரர்களை திக்குமுக்காட வைக்கிறது.