games

img

விளையாட்டு செய்திகள்

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட்

ஒன்றரை நாளில் 603 ரன்கள் குவித்து மிரட்டிய இந்திய மகளிர் அணி

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள், டெஸ்ட், டி-20 என மூன்று விதமான போட்டிக ளை கொண்ட தொடரில் பங்கேற்க இந்தி யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றிய நிலையில், ஒரே ஒரு போட்டியை கொண்ட டெஸ்ட் போட்டி வெள்ளியன்று தொடங்கியது. 

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கிய நிலையில், தொடக்க வீராங்கனைகளான சபாலி வர்மா -  ஸ்மிரிதி மந்தனா ஜோடி டி-20 ஆட்டம் போல தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை பந்தாடியது. சபாலி வர்மா (205) இரட்டை சதம் அடித்தும், ஸ்மிரிதி மந்தனாவின் (149) சதமடித்து ஆட்டமிழந்த நிலையில், பின்வரிசையில் களமிறங்கிய ரிச்சா கோஷ் (86), கேப்டன் கவுர் (69), ரோட்ரிக்ஸ் (55) ஆகியோரும் பேட்டிங்கில் மிரட்ட இந்திய அணி முதல் இன்னிங்சில் 115.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 603 குவித்து, டெஸ்ட் விளை யாட்டில் தனது அதிகப்பட்ச ரன்குவிப்பை பதிவு செய்தது.

ஆடவர் பிரிவில் கூட ஒன்றரை நாளில் 603 ரன்கள் குவிப்பது சாதாரண விஷயம் கிடையாது என்ற நிலையில், இந்திய மகளிர் அணி டெஸ்ட் போட்டியில் அதிரடி ரன் குவிப்பு மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது. முன்ன தாக இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய மகளிர் அணி 98 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 525 ரன்கள் குவித்து, சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 500 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோபா அமெரிக்கா - 2024 பிரேசில் கலக்கல்

அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சனியன்று அதிகாலை நடை பெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அணியான பிரேசில் - பராகுவே அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி ஆட்ட நேர முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அதே போல சனி யன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை பந்தாடியது.

ஐரோப்பிய கால்பந்து - 2024

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடக்கம்

17ஆவது சீசன் ஐரோப்பிய கால் பந்து தொடர் ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரு கிறது. இந்த தொடரின் லீக்  ஆட்டங்கள் வியாழனன்று நிறைவு பெற்ற நிலை யில், சுவிட்சர்லாந்து, இத்தாலி, டென் மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்லோவேக் கியா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜார்ஜி யா, பெல்ஜியம், போர்ச்சுக்கல், ஸ்லோ வேனியா, ருமேனியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, துருக்கி என 16 நாடுகள் நாக் அவுட் (வெளியேறுதல்) சுற்றுக்கு தகுதி பெற்றன. 

இந்நிலையில், சனியன்று முதல் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கிய நிலையில், ஞாயிறன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி ஞாயிறன்று இரவு 9:30 மணிக்கு இங்கிலாந்து - ஸ்லோவேக்கியா அணிக ளும், நள்ளிரவு 12:30 மணிக்கு ஜெர்மனி - டென்மார்க் அணிகளும் மோதுகின் றன. நாக் அவுட் சுற்றில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பதால், ஐரோப்பிய கால்பந்து தொடரின் ஒவ் வொரு ஆட்டங்களும் இனி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

களத்தில் இன்று...
யூரோ - 2024
இங்கிலாந்து - ஸ்லோவேக்கியா
நேரம் : இரவு 9:30 மணி
இடம் : ஜென்செல்கிர்சன், ஜெர்மனி

ஸ்பெயின் - ஜார்ஜியா
நேரம் : நள்ளிரவு 12:30 மணி
இடம் : கொலோக்னே, ஜெர்மனி

கோபா - 2024
அர்ஜெண்டினா - பெரு
நேரம் : அதிகாலை 5:30 மணிக்கு மேல்
இடம் : மியாமி மைதானம், அமெரிக்கா

கனடா - சிலி
நேரம் : அதிகாலை 5:30 மணிக்கு மேல்
இடம் : புளோரிடா மைதானம், அமெரிக்கா

;