games

img

விளையாட்டு...

புனே டெஸ்ட் நியூஸிலாந்து அணியை புரட்டியெடுத்த தமிழர்கள்

3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க நியூ ஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தி யாவிற்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொட ரின் முதல் ஆட்டம் புதனன்று கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடைபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் நியூஸி லாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2ஆவது டெஸ்ட்  போட்டி மகாராஷ்டிராவின் முக்கிய நகரான புனேயில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸி லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சா ளர்களான அஸ்வின் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி நியூஸிலாந்து பேட்டர் கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த ஜோடியின் தாக்குதலுக்கு டாம் லதாம் (15), வில் யங் (18) மட்டுமே மிக விரைவாக ஆட்டமிழந்தனர். ஆனால் கான்வே (76) - ரச்சின் (65) ஜோடி புனே மைதானத்தில் நங்கூரம் அமைத்து, மேலும் விக்கெட் சரியாமல் பார்த்துக் கொண்டது.  கான்வே-ரச்சின் ஜோடி அரை சத மடித்து ஆட்டமிழந்த பின்பு வாஷிங்டன் சுந்தர் தனது சுழற்பந்து வீச்சு   தாக்கு தலை தீவிரப்படுத்தினார். அடுத்த 2 மணிநேரத்தில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து அணியின் பின்வரிசை சீட்டுக்கட்டாய் சரிந்தது.  நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர் களில் 259 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுக்களை  யும், அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல்  இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே ரோகித் சர்மாவை (0) இழந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் (6), கில் (10) களத்தில் உள்ளனர். வெள்ளியன்று தொடர்ந்து 2ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

புரோ கபடி 2024 ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் தமிழ் தலைவாஸ்

11ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் முதல் சுற்று ஆட்டம் தெலுங் கானா மாநில தலைநகர் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசன்களை போலவே பலமான கட்ட மைப்புடன் களமிறங்கியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, 11ஆவது சீசனின் தொடக்க லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 44-29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து தனது 2ஆவது லீக் ஆட்டத் தில் நடப்பு சாம்பியனான புனே அணியை 35-30 என்ற புள்ளிக்கணக் கில் புரட்டியெடுத்தது.  இந்நிலையில், தனது 3ஆவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா அணியை எதிர்கொள்கிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டி யலில் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணியும், முதல் வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் மேல்நோக்கி முன்னேறும் முனைப்பில் பாட்னா அணி யும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆட்டங்களும் : கச்சிபலி மைதானம், ஹைதராபாத்

தமிழ் தலைவாஸ்-பாட்னா
நேரம் : இரவு 8 மணி

பெங்களூரு - புனே
நேரம் : இரவு 9 மணி