games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று நடைபெறும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஆஸ்திரேலியா - வங்கதேசம் மோதல்

சனியன்று நடைபெறும் 43-ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம்தான். காரணம் ஆஸ்திரேலியா அணி 8 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி யுள்ளது. வங்கதேசம் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 புள்ளிகளுடன் உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இதனால் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் எந்த பலனையும் அளிக்கப் போவதில்லை. இருப்பினும் ஆறுதல் வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் வங்கதேச அணியும், 14 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துடன் அரையிறுதியில் விளையாடும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா - வங்கதேசம்
இடம் : புனே மைதானம், மகாராஷ்டிரா
நேரம் : காலை 10:30 மணி

அதிசயம் நிகழ்ந்தால் அரையிறுதி
சிக்கலான சூழ்நிலையில் களமிறங்கும் பாகிஸ்தான்

சனியன்று நடைபெறும் 44-ஆவது லீக் ஆட்டத் தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு எந்த பலனையும் தரப்போவ தில்லை. காரணம் அந்த அணி ஏற்கெனவே அரையிறுதியில் வெளியேறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு அப்படி யல்ல. அந்த அணிக்கு இது மிக  மிக முக்கியமான ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பிரம்மாண்ட வெற்றி யை ருசித்தால் ரன்ரேட் அடிப்ப டையில் நியூஸிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி அரையிறுதி க்கு தகுதி பெறலாம். 

பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்றால் இதெல்லாம் இன்று நடக்க வேண்டும் 

1. மிக மிக முக்கியமாக பாகிஸ்தான் டாஸ் வென்று  முதலில் பேட்டிங் செய்ய வேண்டும்
2. 300 ரன்கள் குவித்தால் இங்கிலாந்தை 13 ரன்களுக்குள் பந்தாட வேண்டும்.
3. 400 ரன்கள் குவித்தால் இங்கிலாந்தை 112 ரன்களுக்குள்  சுருட்ட வேண்டும்.
4. 500 ரன்கள் குவித்தால் இங்கிலாந்தை 211 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும்.
5. அதாவது 287+ ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பாகிஸ்தான் புரட்டியெடுக்க வேண்டும்.
6. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கும் இலக்கை 2.3 ஓவர்களுக்குள் எட்ட வேண்டும்.
இது எல்லாம் நடந்தால் தான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும். டாஸ் வென்றாலே பாகிஸ்தான் நிலைமை மிகவும் மோசமாகும். டாஸ் தோற்றாலும் சரி, ஆட்டத்தில் தோற்றாலும் சரி பாகிஸ்தான் அணி, பெட்டி, படுக்கைகளுடன் நேரடியாக தில்லி மைதானம் சென்று இஸ்லாமாபாத்திற்கு (பாகிஸ்தான்)  செல்ல வேண்டும்.

மழை வருமா?

ஆஸ்திரேலியா - வங்க தேசம் ஆட்டம் நடை பெறும் இடமான மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் சனியன்று நிலவரப்படி லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.  இங்கிலாந்து - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் இடமான மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சனியன்று நிலவரப்படி மழைக்கு வாய்ப்பில்லை.

இரு ஆட்டங்களை காண...

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி - ஹாட்ஸ்டார் (இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும். ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)

இங்கிலாந்து - பாகிஸ்தான்
இடம் : ஈடன் கார்டன்,கொல்கத்தா, மேற்கு வங்கம்
நேரம் : மதியம் 2:00 மணி