games

விளையாட்டு செய்திகள்

சண்டே ஸ்பெஷல்

மூத்த வீரர்களுக்கு மரியாதை:
 மும்பை அணி நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும்

ஐபிஎல் தொடரின் மிக முக்கிய நட்சத்திர அணிகளில் ஒன்றான மும்பை அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள் ளது. 5 பட்டங்களையும் இந்திய அணி யின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுத் தந்துள்ளார். இதனால் மும்பை அணி க்கு இருப்பது போல ரோகித் சர்மா வுக்கு நாடு முழுவதும் பிரம்மாண்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இத்தகைய சூழலில் கடந்த 3 சீசனில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றாததால் கேப்டன் மற்றும் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ள ரோகித் சர்மாவை நீக்கி, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் கேப்டனாக கள மிறக்கியுள்ளது மும்பை அணி நிர்வாகம். 

ஐபிஎல் என்பது உள்ளூர் போட்டி என்பதால் கேப்டன் மாற்றம் என்பது சகஜமான விஷயம் என்றாலும், ஐபிஎல்லில் உள்ள ஒரு தனிப்பட்ட கிளைமேக்ஸ் விஷயத்தை பற்றி சிந்திக்காமல் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி யது இன்றளவுக்கும் மிகப்பெரிய சர்ச்சையாகவே உள்ளது.

சென்னை, பெங்களூரு அணிக ளின் நிர்வாகத்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்

ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் ஆதரவு முறை மாநிலம் மற்றும் மொழி அடிப்படையில் உள்ளது. இதனால் ஐபிஎல் விளையாடும் கேப்டன்கள் மற்றும் மூத்த வீரர்களை தங்களது பிடித்தமான வீரர் என்பதை கடந்து, தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வர் போல ஆதரவு அளித்து வருகின்ற னர். எடுத்துக்காட்டாக சென்னை அணி யின் கேப்டன் தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ்நாடு மாநிலத்தின் மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களின் பிடித்தமான வீரராக உள்ளார்.

அதே போல பெங்களூரு அணி யின் மூத்த வீரர் விராட் கோலி கர்நா டக மாநிலத்தின் மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் பிடித்தமான வீரராக உள்ளார். தோனி, விராட் கோலியின் அணிகள் வெற்றி பெற்றா லும், தோல்வி கண்டாலும் அந்த அணி யின் ரசிகர்கள் இரண்டையும் கொண் டாடுவர்கள். அதே போல இரு அணிக ளின் நிர்வாகங்களும் தோனி மற்றும் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வரை ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளது. தற்போதைய சீசனில் விருப்பத்தால் மட்டுமே தோனி மற்றும் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்றி யது. ஆனால் மும்பை போல சுய நலத்துக்காக மாற்றவில்லை. 

கோப்பையை வெல்ல வேண்டும் என்ற சுயநல முடிவால் நடப்பு சீசனில் ரசிகர்களின் ஆதரவை இழந்தும், தொடர் தோல்வியை சந்தித்து பிளே  ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறும் நிலையில் உள்ளது. மூத்த வீரர்களின் மரியாதையை பற்றி அம்பானியின் மும்பை அணி நிர்வாகம் நினைத்து இருந்தால், மும்பை அணி நடப்பு சீசனில் இப்படி ஒரு சேதாரத்தை சந்தித்து இருக்க வாய்ப்பில்லை. எந்த துறையாக இருந்தாலும் மரியாதை என்பது மிக முக்கியம் என்பதை மும்பை அணி நிர்வாகம் தற்போது உணர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புகின்றனர் 
ஐபிஎல் களையிழக்கும் அபாயம்

அதிரடி பேட்டிங்கால் கடந்த காலங்க ளை விட நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வீரர்களின் பயமில்லா ஆட்டத் தால் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளும் இறுதி ஆட்டத்துக்கு இணையான அளவில் பர பரப்புடன் நகர்ந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகளின் சுவாரஸ்யத்திற்கு சிக்கல் ஒன்று முளைத்துள்ளது. 

நடப்பு சீசனில் வெளிநாட்டு வீரர்கள் 60% அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆதிக்கம் செலுத்தி வரும் வெளிநாட்டு வீரர் கள் அனைவரும் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை தொடருக் கான தங்கள் நாட்டு அணியில் இடம்பிடித் துள்ளனர். புரியும்படி சொன்னால் ஐபிஎல் தொடரை ஒரு தகுதி சுற்றாக எடுத்துக் கொண்டு பெரும்பாலான வெளிநாட்டு கிரிக் கெட் வாரியங்கள் உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்துள்ளன. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும்  3 வார காலமே உள்ள நிலையில், இந்த தொடரில் பங்கேற்க ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தங்கள் நாட்டு வீரர்களை, அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் விரைவில் பயிற்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள் ளன. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் முக்கிய நட்சத்திர வெளி நாட்டு வீரர்கள் இன்னும் ஒருவார காலத்தில் தங்களது நாட்டிற்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் தனது சுவாரஸ்யத்தை இழக் கும் சூழல் உருவாகியுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

சென்னை - பஞ்சாப்
(ஆட்டம் - 53)
இடம் : தர்மசாலா, இமாச்சலப்பிரதேசம்
லக்னோ - கொல்கத்தா
(ஆட்டம் - 54)
இடம் : எகானா மைதானம், லக்னோ, உ.பி.,
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (இலவசம்)


 

;