games

img

ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு உதவத் தயார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளை யாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி பேட்டர்களின் சொதப்பலால் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்தியச் சுழற்பந்துவீச்சை எதிர் கொள்ளத் தடுமாறும் ஆஸ்திரேலிய பேட்டர் களுக்கு உதவத் தயார் என அந்நாட்டு முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,” ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எந்நேரமும் நான் உதவத் தயாராக உள்ளேன். சிறந்த  அறிவுரை வேண்டும் என்றால் முன்னாள் வீரர் களை கிரிக்கெட் நிர்வாகம் தனிமைப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேத்யூ ஹேடன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க அதிரடி வீரர் ஆவார். இவர் தற்போது பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் ஆலோசனையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.