games

img

இந்தியாவிற்கு சிக்கல் டி-20 உலகக் கோப்பையில் பும்ரா விலகல்?

இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா முதுகு வலி காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெற விருக்கும் உலகக்கோப்பை டி-20 தொடரில் இருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  மேலும் இந்த செய்திக்கு முன்னோட்ட கார ணமாக இருப்பது தென் ஆப்பிரிக்கா அணிக் கெதிரான முதல் டி-20 போட்டியில் பும்ரா  களமிறங்காமல் இருப்பது தான். பும்ரா உலக கோப்பையில் விலகுவது குறித்து அதிகாரப் பூர்வத் தகவல் இன்னும் வெளிவரவில்லை யென்றாலும் இந்தத் தகவல் இந்திய கிரிக் கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஆஸ்திரேலியா போன்ற உயிரோட்டமான ஆடுகளங்களில் பும்ரா மிக நன்றாக பந்துவீசக்கூடியவர். முக்கியமாக டெத் ஓவர்களில் மிக அரு மையாக செயல்படுவார் என்பதால் வர விருக்கும் டி-20 உலகக் கோப்பை தொடரில் பும்ராவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. ஒரு வேளை பும்ராவால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் உலகக்கோப்பையில் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

;