புரோ கபடி 2024 இரண்டாவது வெற்றியை ருசிக்குமா தமிழ் தலைவாஸ் இன்று புனே அணியை எதிர்கொள்கிறது
11ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் முதல் சுற்று ஆட்டம் தெலுங்கானா மாநில ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசன்களை போலவே பலமான கட்டமைப்பு டன் களமிறங்கியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 11ஆவது சீசனின் தொடக்க லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 44-29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இந்நிலையில், தனது 2ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான புனே அணியை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி. முதல் இரண்டு லீக் ஆட்டத்தில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற புனே அணி, 3ஆவது வெற்றியை ருசிக்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்கிறது. அதே போல தமிழ் தலைவாஸ் அணியும் 2ஆவது வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் டாப் ஆர்டரில் முன்னேறும் முனைப்பில் புனே அணியை எதிர்கொள்கிறது. தமிழ் தலைவாஸ் - புனே ஆகிய இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தலைவாஸ்-புனே
நேரம் : இரவு 8 மணி
குஜராத் - மும்பை
நேரம் : இரவு 9 மணி
2026 காமன்வெல்த் ஹாக்கி, துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம், கிரிக்கெட் போட்டிகள் நீக்கம்
23ஆவது காமன் வெல்த் விளை யாட்டுப் போட்டிகள் பிரிட்டன் நாட்டில் (கிளாஸ் கோ - ஸ்காட்லாந்து) 2026 ஆம் ஆண்டு நடை பெறுகிறது. ஒலிம்பிக் தொட ருக்கு அடுத்து மிக முக்கிய மான தொடராக காமன் வெல்த் கருதப்படும் நிலை யில், 2026ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் தொடரில் ஹாக்கி, துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட், டேபிள் டென் னிஸ், ஸ்குவாஷ், டிரை யத்லான் உள்ளிட்ட 8 போட்டி கள் நீக்கப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது. டிரையத்லான் தவிர மற்ற 7 பிரிவுகளும் இந்திய வீரர் - வீராங்கனைகளுக்கு பதக்க வாய்ப்புள்ள விளை யாட்டுகள் என்பதால் காமன் வெல்த் கமிட்டியின் முடி வுக்கு இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியாவில் 2026ஆம் ஆண்டுக்கான காமன் வெல்த் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக விக்டோரியா மாகாண நிர்வாகம் கைவிரிக்க, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகருக்கு காமன்வெல்த் போட்டிகள் மாற்றப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளை யாட்டு கூட்டமைப்பு (CGF) விளையாட்டுகளை நடத்து வதற்கான செலவைக் குறைக்கும் வகையிலேயே 8 விளையாட்டுகளை நீக்கி யுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல விளையாட்டு நிகழ்வை பட்ஜெட்டுக்குள் சிக்கனமாக நடத்தும் வகை யில் நான்கு இடங்களில் மட்டுமே காமன்வெல்த் போட்டி - 2026 நடத்தப்படு கிறது. கிளாஸ்கோவில் 2026ஆம் ஆண்டின் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை காமன்வெல்த் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.