games

img

விளையாட்டு...

பாரா ஒலிம்பிக் 2024 ஈட்டி எறிதலில் புதிய வரலாறுடன் தங்கம் வென்றார்  சுமித் அண்டில்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர்  தற்போது நடுக்கட்டத்தை தாண்டி யுள்ள நிலையில், இந்திய நேரப்படி செவ்வாயன்று அதிகாலை நடை பெற்ற ஆடவர்  ஈட்டி எறிதல் (எப்-64) பிரிவு இறுதிச் சுற்றில், இந்தியாவின் சுமித் அண்டில் 70.59 மீட்டர் தூரம் ஈட்டி  எறிந்து புதிய பாரா ஒலிம்பிக் சாதனை யுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென் றார். இதே பிரிவில் இலங்கை வீரர் துலன் (67.03 மீ) வெள்ளிப்பதக்கத்தை யும், ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் (64.89 மீ) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரிலும் தங்கப்பதக்கம் வென்ற சுமித் அண்டில் (68.55 மீட்டர்), துப்பாக்கிச்சுடுதல் வீராங் கனை அவனி லெகராவிற்கு பின்னர் தொடர்ந்து 2 பாரா ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற வீரர் என்ற பெரு மையை பெற்றுள்ளார்.  இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள் ளது. மாலை 5 மணி நிலவரப்படி இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 15ஆவது இடத்தில் இருந்தது. 

அமெரிக்க ஓபன் டென்னிஸ்
அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26 அன்று தொடங்கிய நிலையில், தற்போது இந்த தொடரில் ரவுண்ட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி செவ்வாயன்று அதிகாலை நடைபெற்ற  கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின்  போபண்ணா - இந்தோனேசியாவின் அல்டிலா சுத்ஜியாடி ஜோடியும், பிரிட்டனின் எப்டன் - செக்குடியரசின் கெர்ஜிசி கோவா ஜோடியும் மோதினர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-6 (7-4),  2-6, 10-2 என்ற செட் கணக்கில் போபண்ணா - அல்டிலா ஜோடி அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதியில் சின்னர்

ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத்தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர்,  தர வரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் டாமி பவுலை எதிர்கொண்டார். சூப்பர்  பார்மில் உள்ள சின்னர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தி 7-6 (7-3), 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலி றுதிக்கு முன்னேறினார். தரவரிசை யில் 10ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் டி மினார், தரவரிசையில் இல்லாத சகநாட்டு வீரரான தாம்ப்சனை 0-6, 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.