games

img

விளையாட்டு செய்திகள்

டி-20 உலகக்கோப்பை யாருக்கு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெறுவதாக அறிவிக்கப் பட்ட 9ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை ஜூன் 1 அன்று தொடங்கியது. 

மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்  ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வங்க தேசம், மேற்கு இந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய 8 அணிகள் “சூப்பர் 8” சுற்றுக்கு தகுதி பெற்றன. 

“சூப்பர் 8” சுற்று முடிவில் இந்தியா, இங்கி லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானி ஸ்தான் ஆகிய அணிகள் அரையிறு திக்கு முன்னேறின. வியாழனன்று நடைபெற்ற அரை யிறுதி ஆட்டங்களின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி  ஆப்கானிஸ்தான் அணியையும், இந்திய அணி இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில், சனியன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், முதல் முறையாக கோப்பையை வென்று வரலாறு படைக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணியும் என இரு அணிகளும் கோப்பை மீதே குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி வாய்ப்பு 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா

65%                      45%

தென் ஆப்பிரிக்கா பலமான பந்துவீச்சு

தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சில் பிரம்மாண்ட பலத்தில் உள்ளது. ஜேன்சன், ரபடா, நோர்ஜே  ஆகியோர் வேகத்தில் மிரட்டி வரும் நிலையில், சம்சி, மகா ராஜ் சூழலில் கலக்கி வருகின்றனர். இதுபோக பகுதிநேர பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் உள்ள நிலையில், இது இந்திய அணிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும். 

சிக்கலான பேட்டிங்

பந்துவீச்சை போன்று பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்கா அணி பலமான வீரர்களை கொண்டிருந்தா லும், ஒரே ஒரு சிக்கல் அந்த அணிக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. அது யாதெனில் பேட்டிங் வரிசையில் முதல் 7 வீரர்கள் அதிரடிக்கு பெயர் பெற்றவர்கள் என்றாலும், தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்தால் மிடில் மற்றும் பின்வரிசை சரியும் பார்ம் இருப்பதால் இது தென் ஆப்பிரிக்காவிற்கு சிக்கலை ஏற்படுத்தும். இந்த சிக்கல் பலமான பந்துவீச்சை கொண்ட இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா 
உறுதியில்லா பந்துவீச்சு

தென் ஆப்பிரிக்கா அணியைப் போல பலமான பந்துவீச்சு கட்டமைப்பை கொண்டிருந்தாலும் பும்ரா, அக்சர் படேல், குல்தீப், ஜடேஜா ஆகிய 4 பேர் மட்டுமே  கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகின்றனர். அர்ஷதீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மோசமாக பந்துவீசி வருகின்ற னர். சில நேரங்களில் அக்சர் படேல்,  ஜடேஜாவும்  பார்மில்லாத  ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தென் ஆப்பிரிக்கா அணிக்கு நல்ல பலனை தர வாய்ப்புள்ளது.

சூப்பர் பேட்டிங்

இந்திய அணியில் 8 வீரர்கள் வரை பேட்டிங் செய்யும்  திறன் கொண்டவர்கள். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே திடமான நம்பிக்கையுடன் கூடிய ஆட்டத்தை  வெளிப்படுத்தி வருகிறார். மற்ற வீரர்கள் உறுதியான ரன் குவிப்பை வெளிப்படுத்த முடியாமல் ஏதோ வந்தோம்,  போனோம் என்று பேட்டிங் செய்து வருகின்றனர். இது  பலமான பந்துவீச்சு ஆர்டரை கொண்ட தென் ஆப்பிரிக்கா  அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படு கிறது.

மேற்குறிப்பிட்டபடி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சில் சரிசமமான அளவில் பலம் மற்றும் பலவீனத்தை பெற்றுள்ளன. இதனால் யாருக்கு கோப்பை என திடமாக கருத்துக் கூற முடியாது. எனினும் ஆட்டத்திறன், அனுபவமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி கோப்பை வெல்ல 15% கூடுதல் வாய்ப்புள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா
இடம் : கிங்ஸ்டன் ஓவல் மைதானம், பார்படாஸ்
நேரம் : இரவு 8 மணி (இந்திய நேரம்)
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)

மழையும் களமிறங்க வாய்ப்பு

இறுதிப்போட்டி நடைபெறும் பார்படாஸ் நகர வானிலைப்படி சனியன்று அங்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இறுதி ஆட்டம் சுவாரஸ்யமின்றி நகர வாய்ப்புள்ளது. சனியன்று ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டாலும், தொடர்ந்து ஞாயிறன்று இறுதி ஆட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



 

;