games

img

விளையாட்டு செய்திகள்

தனக்கு வேண்டப்பட்டவர்களை பயிற்சியாளராக நியமிக்க விரும்பும் கம்பீர்

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தொடங்கியது முட்டு மோதல்

பாஜக முன்னாள் எம்.பி. யும், முன்னாள் தொ டக்க பேட்டருமான கவுதம் கம்பீர் இந்திய ஆடவர் கிரிக் கெட் அணியின் தலைமை பயிற்சி யாளர்களாக சமீபத்தில் நியமிக்கப் பட்டுளார். ஆளும் பாஜகவைச் சேர்ந்த வர் என்பதால் கம்பீரை மோடி அரசு பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கம்பீர் நியமனத்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குள் (பிசிசிஐ) பல்வேறு பிரச்சனைகள் முளைத்துள்ளன.

தலைமை பயிற்சியாளர் தேர்வுக்கு பின் தற்போது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் உள்ளிட்ட மூன்று பிரிவு பயிற்சி யாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பிரிவில் பேட்டிங் பயிற்சி யாளர் தேர்வு தொடர்பாக பிசிசிஐ வெளிப்படையாக எந்த அறிவிப்பை யும் வெளியிடவில்லை. ஆனால் பந்துவீச்சு பயிற்சியாளர் தேர்வு தொ டர்பாக கம்பீரால் பல்வேறு பிரச்சனை கள் உருவாகியுள்ளது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் கம்பீர்

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் தொடர் பாக தலைமை பயிற்சியாளர் சில ஆலோசனை மற்றும் பரிந்துரையை வழங்கலாமே தவிர, இவரை தான் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என உத்தரவு போட முடியாது. ஆனால் கம்பீர் ஐபிஎல் தொடரில் தான் ஆலோச கராக பணியாற்றிய லக்னோ, கொல் கத்தா அணிகளில் பணியாற்றிய பயிற்சியாளர்களை,  பந்துவீச்சு, பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்க பரிந்துரை செய்துள்ளார். அதன்படி பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மார்க்கல் (கொல்கத்தா - தென் ஆப்பிரிக்க வீரர்), பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் (லக்னோ - தென் ஆப்பிரிக்க வீரர்) ஆகியோரை தேர்வு செய்ய கம்பீர் பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்துள்ளார். இதோடு இந்திய அணியின் முன்னாள் வீரரான வினய் குமாரையும் பந்துவீச்சு பயிற்சியாளராக பரிந்து ரை செய்துள்ளார். ஆனால் இந்த பரிந்துரையை பிசிசிஐ ஏற்காத நிலை யில், கம்பீர் பரிந்துரை தொடர்பாக பிசிசிஐக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

கோபா அமெரிக்கா - 2024
இன்று இறுதி ஆட்டம்
48ஆவது சீசன் கோபா அமெரிக்கா தொடர், அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்களன்று அதிகாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா - கொலம்பியா அணிகள் மோதுகின்றன. 

அர்ஜெண்டினா  -  கொலம்பியா
நேரம் : திங்களன்று அதிகாலை காலை 5:30 மணி
இடம் : மியாமி, அமெரிக்கா
சேனல் : பிபா ஆன்லைன் மட்டும்

பரிசுத்தொகை
சாம்பியன் பட்டம் வெல்லும் 
அணிக்கு - ரூ. 54 கோடி (மொத்த பரிசுத்தொகை - 
ரூ.133 கோடிக்கு மேல் இருக்கும்)
இரண்டாம் இடம் பிடிக்கும் 
அணிக்கு - ரூ. 25 கோடி (மொத்த பரிசுத்தொகை - 
ரூ. 50 கோடிக்கு மேல் இருக்கும்)
அரையிறுதி தோல்வி, காலிறுதி தோல்வி, லீக் சுற்றில் வெளியேறிய அணிகளுக்கு மோதுமான அளவில் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.100 கோடிக்கு மேல் பரிசுத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.