games

img

ராட் மார்ஷ் காலமானார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் முன்னாள் விக்கெட் கீப்பரும் சிறந்த பேட்டருமான ராட் மார்ஷ் மாரடைப்பு காரணமாக 74 வயதில் காலமானார். 1970  முதல் 1984 வரை 14 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் சாதனை விக்கெட் கீப்பராக இருந்த ராட் மார்ஷ் ஓய்வு பெறும் தருணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிக விக்கெட் கீப்பிங் டிஸ்மிஸல்களைக் (355) கொண்டவர் என்ற சாதனையைத் தன் வசம் வைத்திருந்தார்.  ஓய்வுக்குப்பின் இங்கிலாந்து, ஆஸ்தி ரேலியாவின் கிரிக்கெட் அகாடெமிகளின் தலைவராக திறம்பட பணியாற்றியவர். அதன்பின்பு கிரிக்கெட் வர்ணனையாளராக வும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுத் தலைவராகவும் பணியாற்றி னார்.  இந்நிலையில், மார்ஷுக்கு சில நாள் களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. குயி ன்ஸ்லாந்தில் இருந்து மேல்சிகிச்சைக்காக அடிலெய்டு கொண்டுவரப்பட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி காலமானார். ராட் மார்ஷின் மறைவுக்கு கிரிக் கெட் பிரபலங்கள் உள்ளிட்ட  பல்வேறு தரப்பி னரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.