games

img

விளையாட்டு...

பிரபல கார் பந்தய வீரர் கிரேக் பிரீன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

அயர்லாந்து நாட்டின் பிரபல மும், சர்வதேச கார் பந்தய  நிகழ்வில் முக்கிய நட்சத்திர வீரரான கிரேக் பிரீன் குரோஷியாவில் நடை பெற்ற பயிற்சி கார் பந்தய விபத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  33 வயதாகும் கிரேக் பிரீன் 2009-ஆம் ஆண்டு முதல் உலக ரேலி சாம்பி யன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வரு கிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளின் பல்வேறு நிலைகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள கிரேக் பிரீன், ஏற்கெனவே கடந்த 2012-ஆம்  ஆண்டு இத்தாலியில் நடந்த விபத்தில் இணை ஓட்டுநர் கரேத் ராபர்ட்ஸ் உயிரிழந்த நிலையில் படுகாயத்துடன் தப்பினார். கிரேக் பிரீன் மரணம் குறித்து குரோஷிய போலீசார் தீவிர விசார ணை மேற்கொண்டு வருகின்றனர். 

இம்பாக்ட் விதி என்ற பெயரில் நவீன ஆள்மாறாட்டம்

ஐபிஎல் - 2023

16-வது சீசன் ஐபிஎல் தொடரில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதி இம்பாக்ட் (impact) விதி.  இந்த விதி யாதெனில் ஒரு அணி முதல் இன்னிங்ஸில் அறிவிக்கப்பட்ட 11 வீரர்கள் பேட்டிங் செய்யும். அதே  அணி பந்து வீசும் பொழுது பேட்டிங் செய்த வீரரை பெஞ்சில் அமர வைத்து  மாற்று வீரரை களமிறக்கும். பொது வாக மாற்று வீரர் பீல்டிங் மட்டுமே செய்வார். ஆனால், இம்பாக்ட் விதியின் கீழ் களமிறங்கும் மாற்று வீரர் பந்துவீசும் உரிமையை பெறு வார். இதுதான் இம்பாக்ட் (impact) விதியாகும்.  இது நியாமா? ஒரு முக்கியமான பேட்டிங் திறன் கொண்ட வீரரை பேட்டிங் செய்ய வைத்து அவரை பீல்டிங் செய்ய அனு மதிக்காமல் அவரை பெஞ்சில் அமர வைத்து, பேட்டிங் செய்த வீரருக்கு பதிலாக ஒரு நட்சத்திர பந்துவீச்சாள ரை கூடுதலாக களமிறக்கும் கேவ லமான நவீன ஆள்மாறாட்டம்தான் இந்த இம்பாக்ட் விதி. பேட்டிங்கிற்கு ஒரு வீரர், பந்துவீச்சுக்கு ஒரு வீரர் என பயன்படுத்துவது கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியாக இம்பாக்ட் விதி உள்ளது. பீல்டிங்கில் குடைச்சல் ஏற்படுகிறது பேட்டிங் மட்டும் தனி திறனாக உள்ள வீரர்கள் பீல்டிங்கில் கெட்டிக் காரர்களாக இருப்பார்கள். அதாவது பந்துகளை சொதப்பல் இன்றி பிடிப் பார்கள். பீல்டிங்கில் பந்துவீச்சாளர் கள் குறைவான திறனை பெற்றிருப்பார் கள். காரணம் அவர்கள் பந்துவீசி சோர்ந்து, கைகள் சற்று மந்தமான நிலையில் இருக்கும். கேட்ச் செய்யும் பொழுது முழுநேர பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவில் செயல்பட மாட்டார்கள். ஆனால் முழுநேர பேட்டர்கள் பந்துவீச்சு நிலையை பற்றி கவலையில்லாமல், சோர் வில்லாமல் களத்தில் துறுதுறுவென இருப்பார்கள். இது ஒவ்வொரு அணிக்கும் சாதகமாக உள்ள நிலையில், தற்போதைய இம்பாக்ட் விதியால் எல்லாம் மாறி பீல்டிங்கில் குடைச்சல் ஏற்படுகிறது.

மீண்டு எழுவது யார்?
இன்று சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்

திங்களன்று  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை - பெங்களூரு அணிகள் வெற்றி, தோல்வி என ஒரே மாதிரியான சரிசமான அளவில் நடப்பு சீசனில் பயணித்து வருகிறது. அதாவது இரு அணிகளும் பங்கேற்ற 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வி என்ற நிலையில் உள்ளன. கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு இரு அணிகளும் பலமாக இருந்தாலும் இறுதிக்கட்ட சொதப்பல்களால் தோல்வியை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தோல்வி படியில் இருந்து மீள தனது 5-வது லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்குவதால் சென்னை - பெங்களூரு ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டம்

சென்னை - பெங்களூரு
இடம் : சின்னசாமி மைதானம், 
கர்நாடகா, பெங்களூர்
நேரம் :  இரவு 7:30 மணி

சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா