games

img

ஐபிஎல் கோப்பை யாருக்கு?

ஐபிஎல் கோப்பை யாருக்கு?

சென்னை - குஜராத் இன்று பலப்பரீட்சை

கிரிக்கெட் உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் மார்ச் 31 அன்று தொடங்கிய நிலையில், 12 நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் மே 21 அன்று நிறைவுபெற்றது. சென்னை, மும்பை, குஜராத், லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், மே 23 அன்று பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்கின.  சென்னை - குஜராத் அணிகள் மோதிய குவாலிபையர் 1 ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிக்கு முன்னேறியது. மும்பை - லக்னோ அணிகள் மோதிய எலிமினேட்டர் 1 எனப்படும் வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ அணியை மும்பை துரத்தியது. கடைசி பிளே ஆப் ஆட்டமான குவாலிபையர் 2 ஆட்டத்தில் குஜராத் அணி மும்பையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.  இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் அணியும் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.

யாருக்கு வாய்ப்பு?

இரு அணிகளும் சரிசம அளவில் பலம், பலவீன விகிதத்தை கொண்டுள்ள தால் யாருக்கு கோப்பை என்பதை திடமாக கருத்து கூற முடியாது. காரணம் தொடக்கம் நன்றாக அமைந்தால் இரு அணி பேட்டர் களும் நன்றாக பேட்டிங் செய்வார்கள். தொடக்கம் சொதப்பினால் சீட்டுக்கட்டாய் சரிவார்கள். இதுதான் சென்னை - குஜராத் அணிகளின் பேட்டிங் பலம், பலவீனமாகும். பந்துவீச்சில் இரு அணி வீரர்களும் அதே போலதான். எதிரணி பேட்டர்கள் ஓரளவுக்கு ரன் குவித்தால் அனைவரும் சொதப்பி, நோ பால், வைடு அதிகமாக வீசி ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறி விடுவார்கள். குஜராத் அணியை ஏற்கெனவே குவாலி பையர் ஆட்டத்தில் வீழ்த்திய அனுபவத்தில் சென்னை அணிக்கு கூடுதல் சாதகத்தை உருவாக்கலாம். அதே போல குவாலி பையர் ஆட்டத்தில் வீழ்ந்தாலும் கடினமான போராட்டத்திற்கு பிறகு இறுதிக்கு முன்னே றியுள்ளதால் குஜராத் அணி கோப்பையை வெல்ல சகல வாய்ப்புள்ளது. அனைத்து திறனிலும் சென்னை, குஜராத் அணிகள் பல ஒற்றுமைகளை பெற்றிருப்பதால் எந்த அணி கோப்பை வெல்லும் என ஆருடம் கூட உறுதியாக கூற முடியாது என்பதால் போட்டியின் ஒவ்வொரு நகர்வை பொறுத்தே 2023 ஐபிஎல் கோப்பை யாருக்கு என கணிக்க முடியும்.

குஜராத் - சென்னை
வெற்றி வாய்ப்பு
இடம் : அகமதாபாத் மைதானம், குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஒடிடி - ஜியோ சினிமா

பரிசுத்தொகை
சாம்பியன் - ரூ. 20 கோடி  2-ஆம் இடம் - ரூ.13 கோடி 3-ஆம் இடம் - ரூ. 7 கோடி (மும்பை அணிக்கு) 4-வது இடம் -  ரூ. 6.5 கோடி (லக்னோ அணிக்கு) சிறந்த வளரும் வீரர் -  ரூ.20 லட்சம் ஆரஞ்சு தொப்பி  (அதிக ரன்கள்) - ரூ.15 லட்சம் (கில் - குஜராத்) பர்ப்பிள் தொப்பி  (அதிக விக்.,) - ரூ.15 லட்சம் மதிப்புமிக்க வீரர் -  ரூ.12 லட்சம் கேம் சேஞ்சர் - ரூ.12 லட்சம் அதிக சிக்ஸ் - ரூ.12 லட்சம் சூப்பர் ஸ்ட்ரைக்கர்- ரூ.15 லட்சம்

மைதானம் எப்படி?

அகமதாபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் ஆகும். பந்துவீச்சை கவனமாக கணித்து ஆடினால் 200 ரன்களுக்கு அசால்ட்டாக விளாசலாம். வேகப்பந்துவீச்சை விட சுழற்பந்துவீச்சு ஓரளவுக்கு எடுபடும். மற்றப்படி பந்துவீச்சில் மைதானத்திற்கு தனிப்பட்ட முறையில் எந்த சிறப்பும் கிடையாது.

மழை வருமா?

ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் நகரில் ஞாயிறன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பெரியளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும், மாலை நேர குளிர்ந்த காற்றால் 40% அளவில் மழைக்கு வாய்ப்புள்ளது.



 

 

;