games

img

விளையாட்டு செய்திகள்

33 ஆண்டுகளாக துரத்தும் துரதிர்ஷ்டம்:
மீண்டும் கண்ணீருடன் விடைபெற்ற தென் ஆப்பிரிக்கா

கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெற்று வந்த 9ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில்  இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்து முதலில் களமிறங்கிய  இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இறுதிக்கட்ட சொதப்பலால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில், இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  2ஆவது முறையாக மீண்டும் டி-20 உலகக்கோப்பையை கையில் ஏந்தியது. 

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்த 3ஆவது நபர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதற்கு முன் கபில்தேவ், தோனி ஆகியோர் இந்தியாவிற்கு உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோகத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள்

கிரிக்கெட் உலகில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,  இலங்கை, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான்,  மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 8 நாடுகள் முன்னணி அணியாக  உள்ளன. இதில் 7 நாடுகள்  உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், அதிரடிக்கு பெயர் வலுவான அணிகளில் ஒன்றான  தென் ஆப்பிரிக்கா அணி மட்டும் 33 ஆண்டுகளாக உலகக்கோப்பைக்காக ஏங்கி வருகிறது. ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதிக்கட்ட சொதப்பலால்  உலகக்கோப்பையை கையில் ஏந்தமால் அந்த அணி வீரர்கள் கண்ணீருடன் விடைபெறுவது வாடிக்கையயான சம்பவமாக உள்ளது. எனினும் 9ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை மூலம், தனது கிரிக்கெட் வாழ்நாளில் முதன் முறையாக உலகக்கோப்பையில் இறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா கடைசி நேரத்தில் சொதப்பலாக விளையாடி மீண்டும் மண்ணை கவ்வியது. என்ன காரணமோ தெரியவில்லை,  கடந்த 33 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க அணியை துரதிர்ஷ்டம் துரத்தி வரும் நிலையில்,  கோப்பையை கையில் ஏந்தாமல் அந்நாட்டு வீரர்கள், ரசிகர்கள் கண்ணீருடன் விடைபெற்றது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகக்கோப்பையுடன் விடைபெற்றார் டிராவிட்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாராக ராகுல் டிராவிட் கடந்த நவம்பர் 2021 அன்று பொறுப் பேற்றார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 2023இல் நடைபெற்ற உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொட ரில் இறுதி ஆட்டம் வரை முன் னேறி நூலிழையில் கோப்பையை நழுவ விட்டது. ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் டி-20 உலகக்கோப்பையுடன் நிறைவுபெற்ற நிலையில், ஒப்பந்த காலத்தை மேற்கொண்டு நீடிக்க விரும்பவில்லை என அவர் கூறினார். இதனால் டி-20 உலகக்கோப்பை டிரா விட்டுக்கு கடைசி தொடராகஅமைந்தது. 

முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்டருமான ராகுல் டிராவிட் 16 வருடமாக இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால் ஒருமுறை கூட அவர் உலகக்கோப்பையை கையில் ஏந்தி யது கிடையாது. பயிற்சியாளர் பொறு ப்பிலாவது உலகக்கோப்பையுடன் விடைபெறுவாரா? என இந்திய ரசி கர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலை யில், டி-20 உலகக்கோப்பையை கைப் பற்றி ராகுல் டிராவிட்டின் உலகக் கோப்பை கனவை நனவாக்கினர் இந்திய அணியினர். உலகக்கோப்பை யை டிராவிட்டிடம் கொடுத்து இந்திய வீரர்கள் அவரை கட்டியணைத்தும், மேலே தூக்கி போட்டும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விராட்கோலி,  ரோகித் சர்மா ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி (35), உல கக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டனுமான ரோகித் சர்மா (37) ஆகிய ஒருவரும் 9ஆவது சீசன் உலகக் கோப்பை தொடரோடு சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து விடைபெறுவ தாக அறிவித்தனர். இனிமேலே விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரும் டெஸ்ட், ஒருநாள், ஐபிஎல் போட்டி களில் மட்டுமே விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;