games

img

விளையாட்டு...

உலக இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் இந்தியாவிற்கு 2 வெண்கலம்

உலக இளையோர் பளு தூக்குதல் சாம்பியன் ஷிப் தொடர் தென் அமெரிக்க நாடான பெருவின் லிமாவில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் இளை யோர் 40 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சபர் மொத்தம் 128 கிலோ (56 கிலோ + 72 கிலோ) எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். ஜோஷ்னா சபர் புதன்கிழமை நடைபெற்ற கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவார். அதே போன்று ஆடவர் இளை யோர் 49 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஹர்சபர்தன் சாஹு மொத்தம் 197 கிலோ (87 கிலோ + 110 கிலோ) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். ஹர்சபர்தன் சாஹு ஏற் கெனவே கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென் றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்கம்

கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் பாகிஸ் தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார். இவருக்கு பாகிஸ்தா னில் மட்டுமின்றி இந்தியாவில் பிரம்மாண்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  இந்நிலையில், அர்ஷத் நதீமின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குப் பிறகு, ஒன்றிய அர சின் சட்டப்பூர்வ கோரிக்கை காரணமாக அர்ஷத் நதீமின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள் ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியா வில் இருந்து நதீமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அணுக முயற்சிக்கும் பயனர் களுக்கு, “இந்தியாவில் கணக்கு கிடைக்க வில்லை.  இந்த உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவ தற்கான சட்டப்பூர்வ கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றியதால் இது நிகழ்ந் தது” என்ற தகவல் வெளியாகி வருகிறது.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் இத்தாலியின் முஸெட்டி

ஸ்பெயின் நாட்டின் தலை நகர் மாட்ரிட் நகரில் “ஏடிபி மாஸ்டர்ஸ் 1000” டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள ஆஸ்தி ரேலியாவின் டி மினார், போட்டித் தர வரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள  இத்தாலியின் லோரன்சொ முஸெட்டி யை எதிர்கொண்டார்.  முஸெட்டியை விட டி மினார் அனுபவத்திலும், அதிரடியிலும் பெயர் பெற்றவர் என்ற நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே முஸெட்டி ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டநேர முடிவில் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் முஸெட்டி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஐபிஎல் 2025 இன்றைய ஆட்டம்

குஜராத் - ஹைதராபாத்

நேரம் : இரவு 7:30 மணி இடம் :என்.எம். மைதானம், அகமதாபாத், குஜராத் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)