10-ஆவது சீசன் புரோ கபடி தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி யுள்ள நிலையில், செவ்வாயன்று நடை பெற்ற 10-ஆவது கட்ட லீக் ஆட்டத்தின் 108-ஆவது போட்டியில் உத்தரப்பிர தேச அணியை 32 - 25 என்ற கணக்கில் வீழ்த்திய தமிழ்நாடு அணி 8-ஆவது வெற்றியை ருசித்து 45 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-ஆவது இடத் திற்கு முன்னேறியுள்ளது.
இனிவரும் ஆட்டங்களில் தோல்வி யை சந்திக்காமல் வெற்றியை மட்டும் குவித்தால் அதிர்ஷ்ட வாய்ப்புடன் தமிழ்நாடு அணிக்கும் குவாலிபையர் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் தமிழ்நாடு வீரர்களின் ஆட்டத் திறனை பொறுத்தே குவாலிபையர் கனவு நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புனே
ஜெய்ப்பூர் அணியை தொடர்ந்து புனே அணியும் குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. புனே அணி இது வரை 17 ஆட்டங்களில் விளையாடி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டை என 71 புள்ளிகளை குவித்து புள்ளிப்பட்டிய லில் 2-ஆவது இடத்தில் உள்ளது.
இன்று விடுமுறை
தில்லியில் நடைபெற்ற 10-ஆவது கட்ட லீக் ஆட்டம் புதனன்று நிறைவு பெற்ற நிலையில், 11-ஆவது கட்ட லீக் ஆட்டம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் வெள்ளியன்று தொடங்குகிறது. போட்டி அமைப்பு, அணிகள் இடம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புரோ கபடி தொடருக்கு வியாழனன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.