பாரீஸ் ஒலிம்பிக்
(தொடங்கும் நாள் : ஜூலை 26 - பிரான்ஸ்)
80 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
33ஆவது ஒலிம்பிக் தொடர் ஐரோப்பா நாடான பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் வரும் ஜூலை 26 அன்று தொடங்குகிறது. இந்த தொடருக்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில், போட்டி தொடங்குவது மட்டுமே பாக்கி.
இந்நிலையில், ஒலிம்பிக் தொடர் தொடங்குவதற்கு முன்பே டிக்கெட் விற்பனை களைகட்டியுள்ளது. இதுவரை சுமார் 80 லட்சம் (8.8 மில்லியன்) டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறுகிறது. எனினும் தொடக்க விழாவை காண சலுகை விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் அரசின் கஜானா நிரம்ப வாய்ப்பு
உலகளவில் அதிக சுற்றுலாப்பயணிகள் இருக்கும் நாடாக பிரான்ஸ் உள்ளது. அங்கு ஆண்டுக்கு 10 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்லும் நிலையில், பிரான்ஸ் அரசுக்கு சுற்றுலா வருமானமே பிரதான வருவாயாக உள்ளது. தற்போது 3ஆவது முறையாக அந்நாடு ஒலிம்பிக் தொடரை நடத்த உள்ள நிலையில், ஒலிம்பிக் தொடரை காண மற்றும் சுற்றுலாத்தலங்களை கண்டுகளிக்க 30 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு மக்கள் பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தருவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த காலங்களை விட பிரான்ஸ் அரசின் கஜானா மூன்று மடங்கு நிரம்ப வாய்ப்புள்ளது என தற்போதே செய்திகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.
உலகளவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடாக பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்
ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆர்பிஜி குழு மத்திற்கு சொந்தமானதாகும். இந்நிலையில், லக்னோ அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி பேட்டருமான விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஆஸ்திரேலிய நாட்டின் ஜஸ்டின் லங்காருக்கு பதில் விவிஎஸ் லட்சுமணன் விரைவில் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. விவிஎஸ் லட்சுமணன் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய மகளிர் கோப்பை - 2024
இன்றைய ஆட்டங்கள்
பாகிஸ்தான்-ஐக்கிய அரபு அமீரகம்
நேரம் : மதியம் 2 மணி
*
இந்தியா - நேபாளம்
நேரம் : இரவு 7 மணி
இடம் : தம்புலா, இலங்கை (இரண்டு ஆட்டங்களும்)
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
லக்னோ அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன்