games

img

மழையால் இன்றைய போட்டியும் ரத்து!

கான்பூர்,செப்.29- இந்தியா, வங்கதேசத்துக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
கான்பூரில் கடந்த 27ம் தேதி தொடங்கிய போட்டியில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.