games

img

குளிர்கால ஒலிம்பிக் முதலிடத்தில் சீனா

கொரோனா பதற்றத்துக்கு இடையே சீனா வின் தலைநகரான பெய்ஜிங்கில் பரபரப்பாக நடைபெற்று வரும் 24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடரின் பதக்கப்பட்டியலில் சீனா திடீரென உத்வேகம் பெற்று 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. 

ஆஸ்திரியா அசத்தல் 

நடப்பு சீசன் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் அனைத்து பிரிவுகளி லும் அசத்தலாக விளையாடி வரும் ஆஸ்திரியா இது வரை 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. மொத்த பதக்க தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங் களுடன் மொத்த பதக்க தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. நார்வே, கனடா ஆகிய நாடுகளும் பதக்க குவிப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

பதக்கப்பட்டியல் 

நாடுகள்         தங்கம்        வெள்ளி       வெண்கலம்    மொத்தம்
சீனா                        3                  2                       0                      5    
ஸ்வீடன்                  3                  0                       1                      4    
ரஷ்யா                    2                   3                        3                     8
ஆஸ்திரியா          2                    3                       2                      7    
நெதர்லாந்து          2                   2                      1                       5