games

img

தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 4-ஆவது டி-20 போட்டி

தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 4-ஆவது டி-20 போட்டி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல்  3 போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என்ற முன்னிலையில், 4-ஆவது டி-20 போட்டி வெள்ளியன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூரில் நடைபெறுகிறது.  தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், 4-ஆவது டி-20 போட்டி யில் வெற்றி பெற்று 5-ஆவது ஆட்டத்தில் தொடரை கைப்பற்ற மல்லுக்கட்டும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என  இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா
இடம் : ராய்பூர் மைதானம், சத்தீஸ்கர்
நேரம் : இரவு 7 மணி
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் சினி பிளக்ஸ், ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)

ஐஎஸ்எல் கால்பந்தில் மீண்டும் சூதாட்டம்?

இந்திய கால்பந்து துறையை சர்வதேச அளவில் வலுப்படுத்த இந்திய கால்பந்து சம்மேளனம், கால்பந்து விளையாட்டு வளர்ச்சி கழகம் இணைந்து கடந்த 2013இல் இந்தி யன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) என்ற பெயரில் கால்பந்து லீக் தொடர் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 சீசன் நிறைவுபெற்ற நிலையில், தற்போது 10-ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐஎஸ்எல் கால்பந்தில் மீண்டும் சூதாட்டம் (மேட்ச்  பிக்சிங்) நடைபெறும் சூழல் ஏற் பட்டுள்ளதாக இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சௌபே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.  இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “ஐஎஸ்எல் தொடரில் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ள வீரர்களை மீண்டும் சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். இந்த சம்பவங்களை முழுமையாக ஆராய்ந்து விசாரணைக்குப் பின்  தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுப்போம்.வீரர்களையும், கால்பந்து விளையாட்டையும் ஆபத்தில் ஆழ்த்துவதற்கு இதுபோன்ற முயற்சிகளை பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என கல்யாண் சௌபே எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்த அணியை சூதாட்ட கும்பல் தொடர்பு கொண்டது என கல்யாண் சௌபே வெளிப்படையாக கூறவில்லை என்ப தால் ஐஎஸ்எல் தொடரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 2018 ஐஎஸ்எல் தொடரில் சிங்கப்பூர் தரகர்கள் மூலம் பஞ்சாப் அணி சூதாட்ட புகாரில் சிக்கி யது. இந்த விவகாரத்தை தற்பொழுது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சென்னை “பார்முலா 4” கார்பந்தயத்திற்கு எதிராக வழக்கு

வரும் டிசம்பர் 9 மற்றும் 10  அன்று தமிழ்நாடு தலைநகர் சென்னையில் “பார்முலா 4” கார்பந்த யம் நடைபெறுகிறது. சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டி யாக சாலைகள் வழியாக நடத்தப்படு கின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ்  சென்னை “பார்முலா 4” கார்பந்தயம் என்ற நிலையில், இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்  யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த  “பார்முலா 4” கார்பந்தயத் திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் என்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு மனுவில், “நிதியில்லா சூழலில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு எவ்வித நன்மை இல் லாத “பார்முலா 4” கார் பந்தயத்து க்கு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த பந்தயத்தை இருங்காட்டுக்கோட்டை வளாகத்தில் நடத்தினால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.