டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றதே விதிமுறை மீறலானது இதற்கு வாழ்த்து சொல்லலாமா? சேவாக்கிற்கு வலுக்கும் எதிர்ப்பு
13-ஆவது சீசன் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-ஆவது முறையாக கோப்பையை கையில் ஏந்தியது. இறுதிப்போட்டி எவ்வித பிரச்சனை இன்றி சிறப்பாக நிறைவு பெற்றது. வெற்றி கொண்டாட்டத்துடன் சிக்கலின்றி ஆஸ்திரேலிய அணி தங்கள் நாட்டிற்கு கோப்பையை கொண்டு சென்றது. அவ்வளவு தான் உலகக்கோப்பை திருவிழா என்ற நிலையில், இறுதிப்போட்டி காண வந்த பிரதமர் மோடியின் செயலால் உலகக்கோப்பை தொடர் நிறைவு பெற்று ஒருவாரம் காலம் ஆகியும், இன்னும் சர்ச்சை நிகழ்வுகள் நீடித்து வருகின்றன. சேவாக்கின் பாராட்டிற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு இந்திய அணி உலகக்கோப்பை வென்றால் அதனை வைத்து மக்க ளவை தேர்தலுக்கு பயன்படும்படி பிரம்மாண்ட நிகழ்ச்சி நிரலை ஏற்பாடு செய்து இருந்தார் பிரதமர் மோடி. ஆனால் இந்திய அணி போராடி தோல்வியை தழுவ, மோடி யின் அரசியல் ஆதாய நிகழ்ச்சி நிரல் எல்லாம் வீணாய் போனது. எனினும் மனம் தளராத பிரதமர் மோடி கடை சியாக வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று, இந்திய வீரர்களுக்கு ஆறுதல் சொல்வது போல் தனி ஷூட்டிங் போட்டார். பிரதமர் மோடியின் இந்த செய லுக்கு இந்திய வீரர்கள் சூர்ய குமார், முகமது ஷமி உள்ளிட்டோரு டன் முன்னாள் வீரர் சேவாக், “போட்டியில் தோல்வியை தழுவிய ஒரு அணியின் வீரர்களை சந்தித்து உத்வேகம் கொடுத்த ஒரு பிரதமரை இதுவரை நான் பார்த்ததே இல்லை. நம்முடைய வீரர்களுக்கு ஊக்கமளித்து ஆதரவு தந்தது பிரதமர் மோடியின் சிறப்பான அணுகுமுறை. இது அடுத்த உலகக்கோப்பையில் நம்முடைய வீரர்கள் சிறப்பாக விளையாட உதவி யாக இருக்கும்” எனக் கூறினார். பிரதமர் மோடி டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றது விதிமீறல் என்ற நிலையில், விளையாட்டு விதிமுறைகள் நன்றாக தெரிந்தவரான சேவாக் அவரது செயலை பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமரின் செயல் கடுமையான விதிமீறல் வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு செல்ல வீரர்கள், அணிக்குழுவின ருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. மற்ற யாருக்கும் அனுமதி கிடை யாது. கிட்டத்தட்ட அது பாதுகாக்கப் பட்ட பகுதியாக இருக்கும் நிலை யில், பிரதமர் மோடி அரசியல் ஆதாயத்திற்காக அங்கு நுழைந்து விதிமீறலுடன் கேமராமேன், வீடியோ கிராப்பருடன் நுழைந்து ஷூட்டிங் நடத்தியுள்ளார். இதற்கு முட்டுக்கொடுத்து தனக்கு இருக்கும் நற்பெயரை இழந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக். ஏற்கெனவே இந்திய நாட்டின் பெயரை “பாரத்” என மாற்றுவதற்கு சேவாக் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தனது அறைக்கு நுழைய அனுமதி அளிப்பாரா?
1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவரும், முன்னாள் எம்பியுமான கீர்த்தி ஆசாத் (டிஎம்சி) கூறுகை யில், “வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூம் என்பது புனிதமான அறையாகும். சர்வதேச கிரிகெட் வாரியம் கிரிக்கெட் வீரர்களை தவிர வேறு யாரையும் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் அனுமதிப்பதில்லை. டிரெஸ்ஸிங் ரூமிற்கு செல்வதற்கு பதிலாக தனிப்பட்ட முறையில் முன்கூட்டியே பார்வையாளர் பகுதியில் இருந்து பிரதமர் மோடி வீரர்களை சந்தித்து இருக்க வேண்டும். பிரதமர் மோடி தனது ஆதரவாளர்களை படுக்கையறை, உடை மாற்றும் அறை, கழிவறை ஆகிய இடங்களில் வாழ்த்த அல்லது ஆறுதல் கூற அனுமதிப்பாரா? அரசியல்வாதிகளை விட விளையாட்டு வீரர்கள் ஒழுக்கமானவர்கள் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
ஷ்ரேயாஸ் பிரதமரை திட்டவில்லை
பிரதமர் மோடி டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து ஆறுதல் கூறினார். மற்ற வீரர்கள் மோடியை பார்த்து லேசாக புன்னகைத்தனர். ஆனால் அதிரடி பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் பிரதமர் மோடியை கண்டு சிரிக்கவில்லை. உலகக்கோப்பை கைவிட்டதன் கடுப்பில் கோபமாக இருந்தார். ஆனால் பாஜக சார்பு சமூகவலைத்தள ஊடக பிரிவுகள் ஷ்ரேயாஸ் ஐயர் பிரதமர் மோடியை முறைத்ததாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் புரளி ஒன்றை கிளப்பியுள்ளனர். ஆனால் ஷ்ரேயாஸ் வாய் திறக்கவில்லை என்பது தான் உண்மையான விஷயம் ஆகும்.