games

img

2வது இன்னிங்சில் சுதாரித்துக்கொண்ட இங்கிலாந்து அணி

நடப்பாண்டு ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரான  இந்த ஆஷஸ் தொட ரின் முதல் ஆட்டம் பிரிஸ்பேன் நகரில் காபா மைதானத்தில் நடை பெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கி லாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 425ரன்கள் குவித்தது.  இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் மிரட்டலான பந்துவீச்சால் முதல் இன்னிங்ஸை போல இங்கிலாந்து மீண்டும்  சொதப்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  திடீரென உத்வேகம் பெற்ற இங்கிலாந்து பேட்டர்கள் ஆஸ்திரேலிய அணி யின் பந்துவீச்சை சமாளித்து நிதான வேகத்தில் ரன் குவித்த னர்.  தொடக்க வீரர்கள் சொதப் பினாலும் கேப்டன் ரூட் (86), தாவித் மலன் (80) ஆகியோரின் கட்டுக்கோப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் ரன் விகிதம் வேகமாக  எகிறியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 70 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 எடுத்தது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை விட 58  ரன்கள் பின்தங்கிய நிலை யில் உள்ளது. சனியன்று 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.