games

img

இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்

இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் கிரிக்கெட் உலகில் அபாயகரமான செயல்பாடுகளால் உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் சாம்பியன் அணிகளுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வல்லமை கொண்ட அணிகளாக இருப்பது அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய 3 அணிகள் தான். காரணம் இந்த 3 அணிகளின் செயல்பாடு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்பாட்டிற்கு நிகராக இருக்கும். அதாவது இங்கிலாந்து அணிக்கு ஒப்பாக ஸ்காட்லாந்து அணியும், ஆஸ்திரேலிய அணிக்கு அயர்லா ந்தும் விளையாடும். இதில் சுவாரஸ்ய மான விஷயம் என்னவென்றால் ஆஸ்தி ரேலியா, இங்கிலாந்து என இரண்டு அணிகளின் கூட்டுச் செயல்பாடாக நெதர்லாந்து அணியின் ஆட்டம் உள்ளது. அயர்லாந்து அணியை “கிரிக்கெட்டின் ஆஸ்திரேலிய ரத்தம்” என கிரிக்கெட் உலகம் புனைபெயருடன் அழைக்கும் வழக்கம் கூட உள்ளது. இதில் நெதர்லாந்து அணியை கூட சற்று எளிதாக நினைத்து விடலாம். ஆனால் ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளை அவ்வளவு  எளிதாக நினைத்து விட முடியாது. எவ்ளவு பெரிய சாம்பியன் அணிகளாக இருந்தாலும் சற்று அசந்தால் புரட்டியெடுத்து விடுவார்கள். இதனால் வரவிருக்கும் டி-20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் அணிகள் ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளை கவனமாக உற்று நோக்குகிறது. இந்த வரலாறு ஒருப்பக்கம் என்றால், மறுபக்கம் இந்த 3 அணிகளுக்கு ஒரு சிக்கல் உள்ளது. இந்த உலகக்கோப்பையில் திறமை மற்றும் மாற்றுப் பெயரை (பலமான அணி) பயன்படுத்த வேண்டுமானால் தகுதிச் சுற்றில் போராடி வெற்றியை குவித்து “சூப்பர் 12” சுற்றில் காலடி வைக்க வேண்டும். 

தகுதிச் சுற்று ஆட்டங்களே பரபரப்பாக இருக்கும்

இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், நெதர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, யுஏஇ, அயர் லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணி கள் தகுதி சுற்று ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. தகுதி சுற்றில் இருந்து மொத்தம் 4 அணிகள் “சூப்பர் 12” சுற்றுக்கு செல்கிறது. இலங்கை, மேற்கு இந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் “சூப்பர் 12” சுற் றுக்கு எளிதாக முன்னேறும் என்ற  நிலை உள்ளது. மீதமுள்ள 2 இடங் களுக்கு ஸ்காட்லாந்து, அயர்லாந்து,  நெதர்லாந்து ஆகிய அணிகள் மல்லுக்கட்ட வேண்டும். இதுபோக கிரிக்கெட் உலகில் அனுபவ அணி யாக உள்ள ஜிம்பாப்வே வேறு  இருப்பதால் தகுதி சுற்று ஆட்டங் களே சுவாரஸ்யமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி சுற்று  ஆட்டங்கள் அக்., 16-ஆம் தேதி தொடங்குகிறது.

புரோ கபடி லீக் - 2022 
இன்று விடுமுறை

மகளிர் உலகக்கோப்பை
கால்பந்து - 2022 
இன்று விடுமுறை