ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023
இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு
16-வது சீசன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் (ஒருநாள்) தொடர் பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. கடைசி லீக் ஆட்டத்தில் (குரூப் “பி”) இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. குரூப் “பி” பிரிவில் இலங்கை, வங்கதேசம் அணிகள் தலா 2 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் புள்ளிகள் இல்லாமலும் உள்ள நிலை யில், இந்த ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றால் நேரடியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். தோல்வி கண்டால் ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் சிக்கல் உருவாகும். அதே போல ஆப்கானிஸ் தான் அணி வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் எதாவது அதிர்ஷ்ட வாய்ப்புடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறலாம். தோற்றால் லக்கேஜ்களு டன் கொழும்பு விமானநிலையம்தான். இந்த ஆட்டம் இலங்கை - ஆப்கானிஸ் தான் அணிகளுக்கு மட்டுமின்றி வங்க தேச அணிக்கும் முக்கியமானதுதான். ஆப்கானிஸ்தான் அணி தோற்றால் வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன் னேறும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் யார் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது என்ற இடியாப்ப சிக்கலில் தவிக்கும் நிலை உருவாகும். இப்படி ஒரே ஒரு போட்டி பல சிக்கல்களை கொண்டுள்ளதால், இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை - ஆப்கானிஸ்தான்
இடம் : கடாபி மைதானம், லாகூர், பாகிஸ்தான்
நேரம் : மதியம் 3 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் (ஒடிடி - இலவசம்)
(மழைக்கு வாய்ப்பில்லை. நிம்மதியாக போட்டியை காணலாம்)
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரி க்கா ஓபன் டென்னிஸ் தொடரின் 143-வது சீசன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உல கின் 2-ஆம் நிலை வீரரும், செர்பியா நாட்டவருமான ஜோகோவிச், தர வரிசையில் இல்லாத குரோஷியாவின் கோஜோவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கோஜோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர்களான பிரிட்ஜ், தியாபோ ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர். ஸ்வியாடெக் அவுட் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையும், போலந்து நட்சத்திரமுமான ஸ்வியா டெக், லாத்வியாவின் ஒஸ்டாபென்கா வை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒஸ்டாபென்கா 3-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் பெற்று காலி றுதிக்கு முன்னேற, ஸ்வியாடெக் தொடரை விட்டு வெளியேறினார். இதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கவுப், முன்னணி நட்சத்திர வீராங்கனையான வொஜ்னி யாக்கியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
தெரிந்துகொள்ளுங்கள்
சுறுசுறுப்பான ஜப்பான்...
விளையாட்டு உலகில் மிகவும் சுறுசுறுப்பான வீரர் - வீராங்கனைகளை கொண்ட நாடு ஜப்பான் ஆகும். எந்த விளையாட்டாக இருந்தாலும், அந்த விளை யாட்டில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனைகள் ஆட்டநேரமின்றி, மற்ற நேரங்களில் கூட ஒரு இடத்தில் அமராமல் சுறுசுறுப்பாக இருப்பார்கள். புரியும்படி சொன்னால் துறுதுறுவென இருப்பார்கள். இதில் கால்பந்து, ஹாக்கியில் ஜப்பான் வீரர் - வீராங்கனைகளின் செயல்பாடு மிக மோசமானதாக இருக்கும். பந்து தங்களிடம் வந்தாலும் சரி, மற்ற நாட்டு வீரர் - வீராங்கனைகளிடம் இருந்தாலும் சரி ஜப்பான் நாட்டு வீரர் - வீராங்கனைகள் தனியாக நடந்து அல்லது ஓடிக்கொண்டே இருப்பார்கள். சும்மா இருந்தால் ஜப்பான் நாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு பிடிக்காது. ஜப்பான் நாட்டைப் போல ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்வீடன், அமெரிக்க விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் துறுதுறுவென இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்து.