games

img

கத்துக்குட்டி சவூதியிடம் மண்ணை கவ்வியது...

கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப் படும் அர்ஜெண்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் ஆசிய அணியான சவூதி அரேபியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சவூதி அரேபியா 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி கால்பந்து உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்  ளது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நிறைய வீரர்களுக்கு காயம்  ஏற்பட்டது. முக்கியமாக  அர்ஜெண்டினாவின் அதிரடி தடுப் பாட்டத்தால் சவூதியின் முன்கள வீரர்கள் பெரும்பாலானோர் காயமடைந்தனர். 

;