ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
காலிறுதியில் போபண்ணா ஜோடி
112 ஆண்டு பழமை யான டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடை பெற்று வருகிறது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஆஸ்திரேலியா வின் எப்டன் உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வரு கிறார். திங்களன்று நடை பெற்ற 3-ஆவது சுற்று ஆட்டத்தில் போபண்ணா - எப்டன் ஜோடி நெதர்லாந்தின் கூல்கோப் - குரோஷியாவின் மேக்டிச் ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா - எப்டன் ஜோடி 7-6 (10-8), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி யது. செவ்வாயன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் போபண்ணா - எப்டன் ஜோடி அர்ஜெண்டினாவின் மேக்சிமோ-ஆண்ட்ரஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
ஜுவரேவ் மீண்டும் 4 மணி நேரம் போராட்டம்
ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆ வது சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஜுவரேவ், தரவரிசையில் 19-ஆவது இடத்தில் இருக்கும் பிரிட்டனின் நோரியை எதிர் கொண்டார். 4:05 மணிநேரம் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ஜுவரேவ் 7-5, 3-6, 6-3, 6-4, 7-6 (10-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஜுவ ரேவ் தனது 2-ஆவது சுற்று ஆட்டத் தில் செர்பிய வீரரிடம் 4 மணிநேரத் திற்கு மேலாக போராடி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4- ஆவது சுற்று ஆட்டத்தில் உலகத்தர வரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் மெத்வதேவ், தரவரிசையில் இல்லாத போர்ச்சுக்க லின் போர்ஜஸை 6-3, 7-6 (7-4), 5-7, 1-6 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். தரவரிசையில் 9-ஆவது இட த்தில் உள்ள போலந்தின் ஹுபர்ட், தரவரிசையில் இல்லாத பிரான்சின் ஆர்தரை 7-6 (8-6), 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
கண்ணீருடன் விடைபெற்ற சுவிட்டோலினா
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று ஆட்டத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலகத்தரவரிசையில் 18-ஆவது இடத்தில் பெலாரசின் அச ரென்கா, தரவரிசையில் இல்லாத உக்ரை னின் டையானாவை எதிர்கொண்டார். டயானாவிடம் அசரென்காவின் அனு பவம் எடுபடாத நிலையில், 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் டயானா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
கடந்த காலங்களை போலவே அதிரடி யாக விளையாடியதால் அசரென்கா இறு திக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தரவரிசையில் இல்லாத வீராங்கனையிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.
தரவரிசையில் 19-ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் சுவிட்டோலினா காயம் காரணமாக விலக செக்குடியரசின் லிண்டா காலிறுதிக்கு முன்னேறி னார். தரவரிசையில் 26-ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் பவோலினி, தரவரிசையில் இல்லாத ரஷ்யாவின் கலின்ஸ்கயாவிடம் வீழ்ந்து வெளியேற, கலின்ஸ்கயா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
புரோ கபடி 2024 : இன்றைய ஆட்டம்
(86ஆவது லீக் ஆட்டம்)
இடம் :கச்சிபலி மைதானம், ஹைதராபாத், தெலுங்கானா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை : சந்தா தொகை கட்டி இருந்தால் பார்க்கலாம்)