facebook-round

img

குடியுரிமைச் சட்ட நிறைவின் எதிரொலிகள்

பங்களாதேஷின் வெளியுறவுத் துறை அமைச்சர் தன் இந்தியப் பயணத்தை ரத்து செய்து விட்டார். இது குறித்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அதிகாரி பங்களாதேஷின் இந்து சிறுபான்மையினருக்கு தற்போது ஆட்சியிலிருக்கும் அவாமி லீக் அரசினால் எந்தப் பிரச்சினையும் இல்லையென்றும் அந்த அரசு சிறுபான்மையினரின் நலத்தில் அக்கறை கொண்டுள்ளது என்றும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார். அவாமி லீக் அரசு கடந்த 11 ஆண்டுகளாக அங்கு ஆட்சியிலிருக்கிறது. அப்படி என்றால் ஏன் இப்போது அவசர அவசரமாக குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது?
அது மட்டுமல்ல....
இந்திய-ஜப்பானியப் பிரதமர்களின் சந்திப்பு
கவுஹாத்தியில் டிசம்பர் 15 அன்று நடப்பதாக இருந்தது. அதைப் பற்றி எந்தத் தகவலையும் கொடுக்க மறுத்து விட்டார் வெளியுறவுத் துறை அதிகாரி. இப்போது நடந்து வரும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த இரண்டு விஷயங்களைக் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் அவர். அதற்காக நகரம் தூய்மைப் படுத்தப் பட்டு அலங்கார வளைவுகளும் பிற ஜோடனைகளும் அமைக்கப் பட்டன. நேற்றிலிருந்து நடக்கும் கலவரத்தில் அவையனைத்தும் சிதைக்கப் பட்டன; தீக்கிரையாக்கப் பட்டன.

Vijayasankar Ramachandran

;