election2021

img

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை நிராகரித்த மத்திய அரசு.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்...

சென்னை:
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை நிராகரித்துள்ள மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு: 

மருத்துவக் கல்வியில் நீட்தேர்வைமத்திய அரசு கட்டாயப் படுத்தியுள்ளது. இதனால் பாதிக் கப்படும் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5 சதவிகிதமான இட ஒதுக்கீடு வழங்கிசட்டம் நிறைவேற்றியது. இதேபோன்று புதுச்சேரி அரசு,அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதமான இடஒதுக்கீட்டினை வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்திற்கு அப்போதைய துணை நிலை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் 10 சதமான இடஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமலாக்க வேண்டுமென ஒரு மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில்தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம் எனவும், இதனால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்; மேலும் இத்தகைய இட ஒதுக்கீடு நீட் தேர்வு அடிப்படைக்கே விரோதமானது என்பதால் இந்த இடஒதுக்கீட்டை நிராகரிக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் நீட் தேர்வு அமலாகியுள்ள நிலையில் தமிழக அரசு, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதமான இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலாகி வருகிறது. இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மத்திய அரசு, புதுச்சேரிவழக்கில் மேற்கொண்ட அதே அணுகுமுறையினையே இவ்வழக்கிலும் மேற்கொள்ள வாய்ப்புள்ளதால், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 7.5 சதவிகித இடஒதுக்கீடு பறிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசின் இந்த அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மருத்துவப் படிப்பில் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கல்வி உரிமையை தட்டிப்பறிக்கும் அணுகுமுறையை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவது கொடுமையானதாகும். சமூக நீதி கோட்பாட்டிற்கும் முழு விரோதமானதாகும்.

இத்தகைய கொள்கை கொண்டுள்ள பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். இக்கூட்டணிக்கு தமிழக, புதுச்சேரி வாக்காளர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்பது திண்ணம்.நீட் தேர்வு இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இவையெல்லாம் கணக்கு காட்டியது, இன்னும் கணக்கு காட்டாமல் எவ்வளவு இருக்கிறதோ அது வேறு. எனவே பினாமி பெயரில் உறவினர்கள் பெயரில் வெளிநாடுகளில் இங்கிருக்கும் அமைச்சர்களின் சொத்துகள் குவிந்து இருக்கிறது.கொள்ளையடித்து இருக்கும் இவை எல்லாம் இப்போது வெளி வருகிறதோ இல்லையோ நாம் தான் விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறோம். வந்தவுடன் முதலமைச்சரிலிருந்து கடைக்கோடியில் இருக்கும் அமைச்சர்கள் வரையில் செய்திருக்கும் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக உரிய தண்டனை வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.

;