கோவில்பட்டி:
வேளாண் சட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராடுவதை கண்டுகொள்ளாத வர் மோடி. அம்பானி, அதானிகள் கொள்ளை அடிப்பதற்கே 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று வைகோ குற்றம் சாட்டினார்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி செவ்வாயன்று (மார்ச் 30) இரண்டாம் கட்ட பிரச்சாரம்மேற்கொண்டார். கோவில்பட்டி சீனிவாசா நகர், எல்.எஸ்.காம்ப்ளக்ஸ், வில்லிசேரி, இடைசெவல், நாலாட்டின் புதூர் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகசட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தில்லியில் கொட்டுகின்ற பனியில் வாட்டி வதைக்கும் குளிரில் 120 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடிவருகிறார்கள். அதை நரேந்திர மோடிகண்டுகொள்ளவே இல்லை. காரணம்அம்பானி, அதானி, இங்கே இருக்கும்ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்காகத்தான் இந்த சட்டம்கொண்டுவரப்பட்டது. விவசாயி களுக்கு துரோகமான இந்த சட்டங்கள்அமலானால் மண்டிகள் இருக்காது, உணவுக்கழகம் (எப்சிஐ) இருக்காது. மார்க்கெட்டிங் கமிட்டி இருக்காது. சிறியவியாபாரிகள் இருக்க மாட்டார்கள்.
அதானி, அம்பானி, அனில் அகர்வால் போன்ற பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள், நன்றாக விளைகிற காலத்தில் உணவுப் பொருட்களை வாங்கி அவர்களது சேமிப்பு கிடங்குகளில் வைப்பார்கள். இதற்காக ஏற்கனவே சேமிப்புக் கிடங்குகளை கட்டி வைத்துள்ளார்கள். அங்கே கொண்டுபோய் வைத்துவிட்டு அவர்களே ஒருபஞ்சத்தை உருவாக்குவார்கள். பதுக்கிய பொருட்களை அதிக விலைக்கு விற்பார்கள். இப்படி கொள்ளை அடிப்பதற்காகத்தான் இந்த 3 சட்டங்களை கொண்டு வந்திருக் கிறார்கள் என்பதால்தான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு கொடுக்காமல் அந்தச் சட்டங்களை ஆதரிக்கிறது. அதேபோலத்தான் குடியுரிமை சட்டத்தையும் அதிமுக ஆதரிக்கிறது.இங்கு போட்டியிடும் அமைச்சர் பத்து ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்எல்ஏ. நீங்கள் இந்த தொகுதி மக்களுக்காக எதைச் செய்தீர்கள்?. திமுக இந்த தொகுதிக்கு குடிதண்ணீர் திட்டம் கொண்டு வந்தது. நீங்கள்இப்போது ஆங்காங்கு விஷமத்தன மாக வேற்றுமைகளை உருவாக்கும் வகையில் நுண்ணிய முறையில் பிரச்சாரத்தை செய்து வருகிறீர்கள். அது இங்குள்ள மக்களிடம் எடுபடாது. சீனிவாசன் ஜனங்களுக்காக பாடுபடுகிறார். இப்படி பாடுபடுகிற இந்த அணிதான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறது. கோவில்பட்டி தொகுதியில் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து சீனிவாசனை வெற்றிபெறச் செய்யுங்கள்.இவ்வாறு வைகோ பேசினார். வேட்பாளர் சீனிவாசன் அவருடன் பயணித்து வாக்கு சேகரித்தார்.