election2021

img

தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி.... கனிமொழி எம்.பி., சாடல்....

விளாத்திகுளம்:
நானும் ஒரு விவசாயி என தெரிவித்து வரும் எடப்பாடி பழனிச்சாமிவிவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறார் என கனிமொழி எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத்தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடு பட்டார்.விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் ஒன்றியத்தில் உள்ள சென்னமரெட்டிபட்டி, முத்துசாமிபுரம், சிவலார்பட்டி, புதூர் பேரூராட்சி, நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து கனிமொழி எம்.பி., தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ரேஷன் கார்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக வழங்கப்படும். ஆனால் அ.தி.மு.க முதியோர் உதவித்தொகை, மகளிர் குழுக்களுக்கான உதவித்தொகை அனைத்தையும் நிறுத்திவிட்டது. இதுதான் இந்த ஆட்சியின் அவலம் என்றார்.“தி.மு.க தலைவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பெண்கள்  பேருந்து களில் இலவச பயணம் செய்யும் திட்டம் உள்ளிட்டவைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.நானும் ஒரு விவசாயி என தெரிவித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு துரோகம் செய்துவருகிறார். மத்திய அரசுகொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்தவர் தான் இந்த எடப்பாடி பழனிச்சாமி.நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தபோது ஆதரவு தெரிவித்து மாணவர்களுக்கு துரோகம் செய்தது  இந்த அரசுதான். அரசு வேலைவாய்ப்பில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் நுழைவதற்கு வழிவகை செய்தது இளைஞர்களுக்கு துரோகம் செய்தது  அதிமுக அரசு. முழுவதுமாக தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்ததுதான் இந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பெண் உயர் போலீஸ் அதிகாரிக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாதநிலையில் சாதாரண பெண்களுக்குபாதுகாப்பு எந்த அளவில் இருக்கும் என்பது கேள்விக்குறிதான்.இவர்கள் அம்மா அரசு என சொல்லிக் கொள்ளும் அந்த அம்மையாரின் இறப்பில் கூட மர்மம் உள்ளது. இது குறித்து போட்ட கமிஷன் இதுவரை அறிக்கை தாக்கல்செய்யவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை தி.மு.கஆட்சி விசாரணை நடத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கனிமொழி எம்.பி., கூறினார். தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட இடங்களிலெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்புஅளித்தனர்.

கோவில்பட்டி தொகுதியில்...
முன்னதாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சீனிவாசனை அறிமுகப்படுத்தி வைத்த கனிமொழி எம்.பி.,தொடர்ந்து கூட்டணி  வேட்பாளரான கே. சீனிவாசனுக்கு தி.மு.கவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

படக்குறிப்பு : திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நேரில் சந்தித்து கோவில்பட்டி தொகுதி சிபிஎம் வேட்பாளர் கே.சீனிவாசன் வாழ்த்து பெற்றார். உடன் க.கனகராஜ், கே.எஸ்.அர்ச்சுணன் உள்ளிட்ட தலைவர்கள்.