election-2019

img

வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஆனால் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட இருந்த பல கோடி ரூபாய்களை தேர்தல் ஆணையம் பரிமுதல் செய்தது இதனால் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக்கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.