districts

img

தேசிய பாரா தடகளப்போட்டி பதக்கங்கள் வென்ற மதுரை வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு

மதுரை, மார்ச் 31-  21 ஆவது தேசிய பாரா தடகள  சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்  கள் வென்ற மதுரை வீரர், வீராங்கனை களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நக ரில் 21 ஆவது தேசிய பாரா தடகளப் போட்டி மார்ச் 16 முதல் 21 ஆம் தேதி  வரை நடைபெற்றது. அனைத்து மாநி லங்களில் இருந்து சுமார் 1200 விளை யாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கத்தின் மூலம் மாநில தடகளப் போட்டியில் தேர்வு பெற்ற தமி ழக பாரா தடகள வீரர்கள், வீராங்கனை கள் 80 பேர் பங்கேற்றனர். 100 மீட்டர் முதல் 5000 மீட்டர் பிரிவுகள் வரை ஓட்  டம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறி தல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற  போட்டிகளில் பங்கேற்று 11 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்கள் என்று மொத்தம் 29 பதக்கங்கள் வென்ற னர். தமிழ்நாடு வீரர்கள் ஐந்தாம் இடத்தை  பிடித்தனர்.  இதில் மதுரை மாவட்டத்தை சேர்த்த  வீரர் வீராங்கனைகள் 2 தங்கம். 5  வெண்கல பதக்கம் வென்றனர். மனோஜ் (எப் 41) குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய தேசிய சாதனை படைத்தார் .செல்வராஜ் (எப்  40 ) பிரிவில் ஈட்டி எறிதலில் தங்கம், கணே சன் குண்டு எறிதலில் (எப் 41) பிரிவில் வெண்கலம், பிரசாந்த் (எப் 35) பிரி வில் குண்டு எறிதலில் வெண்கலம், முனி யசாமி (எப் 53) பிரிவில் வட்டு எறிதலில் வெண்கலம், ஜாஸ்மின் (எப் 54) பிரி வில் குண்டு எறிதலில் வெண்கலம், அருண்மொழி (எப் 56) பிரிவில் வெண் க லம் வென்றனர்.  பதக்கங்கள் வென்ற வீரர்கள்,  வீரங்கனைகள் மற்றும் பயிற்சியா ளர்கள் குமரேசன், தீபா ஆகியோரை வியாழனன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாற்றுத் திறனாளிகளின் தடகள பயிற்சியாளர் ரஞ்சித் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் மண்டல முதுநிலை மேலாளர் தேனி ஆனந்தம், நிர்வாக மேலாளர் செல்வராஜ் ஆகியோர் டாக்  டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாழ்த்திப் பரிசுகள் கொடுத்து பாராட்டினர்.

;