districts

சிபிஎம் போராட்டம் வெற்றி டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் ஒப்புதல்

புதுக்கோட்டை, ஜூலை 2 - புதுக்கோட்டையில் மருத்துவ மனை, பள்ளி அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அதி காரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். புதுக்கோட்டை பழனியப்பா முக்கத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை  இயங்கி வருகிறது. இந்தக் கடை  ராணியார் மகப்பேறு மருத்துவ மனை மற்றும் அரசுப் பள்ளி அருகில்  உள்ளது. இதனால், மருத்துவ மனைக்கு வருபவர்கள் மற்றும் பள்ளி  மாணவர்கள் கடுமையான தொந்தரவு களை சந்தித்து வந்தனர். குறிப்பாக அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

எம்எல்ஏ தலைமையில் போராட்ட அறிவிப்பு
மேற்படி கடையை அகற்ற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அதிகாரிகளிடம் மனு கொடுத்து பலமுறை வலியுறுத்தி வந்தனர். அதிகா ரிகள் கடையை மூடுவதற்கு எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலை யில், கடையை அகற்ற வலியுறுத்தி கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் கடந்த ஜூன் 30 சாலை மறியல் போ ராட்டம் அறிவித்து துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சி யர் செந்தில்குமார் தலைமையில் புதன் கிழமை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளர் வரதராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்த னன், நகரச் செயலாளர் ஆர்.சோலை யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், இரண்டு மாதத்திற்குள் மேற்படி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த  வெற்றி என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரி வித்துள்ளனர்.

;