districts

நீர்நிலை புறம்போக்கு என வெளியேற்றப்படும் மக்களுக்கு பட்டா வழங்கு சிபிஎம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு

திருப்பூர், மே 6– நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வீடுகளை இடிக்கக்கூடாது. ஆக் கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று  ஏழை, எளிய மக்களை பரிதவிக்கவி டக்கூடாது. ஆண்டாண்டு காலமாய் குடியிருக்கும் மக்களுக்கு உடனடி யாக பட்டா வழங்க வேண்டும் என  வலியுறுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரகங்க ளில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக நடைபெற்ற பெருந் திரள் முறையீட்டு இயக்கத்தில் அங் கேரிபாளையம், கருவம்பாளையம் கே.வி.ஆர் நகர், பட்டுக்கோட்டையார் நகர் பகுதிகள், இடுவாய் ஊராட்சி, பல்லடம் ஒன்றியத்தில் உள்ள பரு வாய் ஊராட்சி, மாணிக்காபுரம் பகுதி, திருமுருகன் பூண்டி நகராட்சி அணைப் புதூர் பகுதி உள்பட பல குடியிருப்பு களில் இருந்தும் பொதுமக்கள் பெருந் திரளானோர் கலந்து கொண்டனர்.  இப்போராட்டத்தில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.ராஜகோபால், கே.உண்ணி கிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலா ளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகர செய லாளர் டி.ஜெயபால், வடக்கு மாநகர செயலாளர் பி.ஆர்.கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப் பன், வேலம்பாளையம் நகரச் செயலா ளர் ச.நந்தகோபால், பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், அவிநாசி ஒன்றிய செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி மற்றும் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவரும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான கே.கணேசன் உட் பட கட்சியின் மாவட்ட, மாநகர, ஒன் றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சி யரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில் தனது அதிகார வரம்புக்கு  உட்பட்டு உரிய நடவடிக்கை எடுப்ப தாகவும்,  மக்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். 

மக்களை வெளியேற்றுவது நியாயமற்ற செயல் -பி.ஆர்.நடராஜன்
கோவையில் நடைபெற்ற மனு  கொடுக்கும் போராட்டத்தின் போது பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களி டம் கூறுகையில், கோவை மாவட் டத்தில் அரசு ஆட்சேபகரமான பகுதி என வகைப்படுத்தப்பட்ட பகுதி களில் வாழும் மக்கள் பல பத்தாண்டு காலமாக எவ்வித நீர்வரத்தும் இல் லாத குடியிருப்புகளிலும், கோவில் நிலங்களிலும் குடியிருந்து வருகி றார்கள். இவர்கள் வசிக்கும் வீடு களுக்கு பட்டா வழங்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெய ரால் வெளியேற்றக்கூடாது.  மேலும், கோவையில் பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியம், சர் கார் சாமக்குளம் ஒன்றியம், கோவை  மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடி சையில் வாழும் மக்களை “நக ரத்தை அழகுபடுத்துகிறோம்” என்ற  பெயரில் அப்புறப்படுத்துவதை நாங் கள் ஏற்கவில்லை. மாநகரில் பல  அரசு அலுவலகங்கள் நீர்நிலை களை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள் ளது. அவ்வாறு இருக்கையில் ஏழை, எளிய மக்களை மட்டும் அப்புறப் படுத்துவது என்பது நியாயமற்ற செயல், என்றார்.

கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து மனு அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்ம நாபன், ஏ.ராதிகா, கோவை மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.பூபதி, கண்ணகி ஜோதிபாசு, பொதுமக்கள் உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலு வலகத்தில் சிபிஎம் தாலுகா உறுப்பி னர் கே.மகாலிங்கம் தலைமையில் பட்டா கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதில், தாலுகா குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட னர்.

காவல்துறையின் தொடர் அராஜகம்
தருமபுரியில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டம் தொடர்பாக நகர காவல் துறையிடம் முறைப்படி அனுமதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தருமபுரி நகர காவல் துறையினர், போராட்ட சுவரொட்டி ஒட்டியவர்களை மிரட்டியுள்ளனர். மேலும், ஒலிபெருக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கிவிட்டு, போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பேச விடாமல் இடையூறு செய்தனர். காவல் துறையின் இந்த ஜனநாயக விரோத அராஜக போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு கொடுக்கும் போராட் டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, பொன்.ரமணி, மேற்கு மாநகர செய லாளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவின்குமார் ஆகி யோர் கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.உதயகுமார், ஏ.ராமமூர்த்தி,  எம்.குணசேகரன், ஐ.ஞானசௌந்தரி, பனமரத்துபட்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ், சேலம் தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள், பொது மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

நீலகிரி
உதகையில் சிபிஎம் தாலுகா செய லாளர் நவீன்சந்திரன் தலைமையில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற் றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் சிறப்புரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நிர்வாகிகள் ராஜரத்தினம், புட்டு சாமி, ராமன், மொய்சின், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைய டுத்து நீலகிரி மாவட்ட துணை வட்டாட் சியரிடம் கட்சி நிர்வாகிகள் மனு அளித் தனர்.

தருமபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்திற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரி முத்து, எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி, தருமபுரி நகரச் செயலாளர் ஆர்.ஜோதி பாசு, ஒன்றிய செயலாளர்கள் தரும புரி, என்.கந்தசாமி, நல்லம்பள்ளி எஸ். எஸ்.சின்னராஜ், காரிமங்கலம் பி. ஜெயராமன், இண்டூர் சிவப்பிரகாசம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. என்.மல்லையன், கே.குப்புசாமி, டி. மாதையன், கே.எல்லப்பன், ஏ.ஜெயா,  கே.பூபதி உட்பட பலர் கலந்து கொண் டனர். நிறைவாக, மனைப்பட்டா கேட்டு 750க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் வழங்கப் பட்டது. அரூரில் நடைபெற்ற மனு கொடுக் கும் இயக்கத்திற்கு மாவட்ட செயலா ளர் ஏ.குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.மல்லிகா, ஒன்றிய செயலாளர் கள் அரூர் பி.குமார், மொரப்பூர் கே. தங்கராஜ், பாப்பிரெட்டிப்பட்டி தனு சன், மாவட்டகுழு உறுப்பினர்கள் டி. வஞ்சி, இ.கே.முருகன், எஸ்.கே. கோவிந்தன், கே.என்.ஏழுமலை, பி.வி. மாது, ஏ.நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் முடி வில் வருவாய் கோட்டாட்சியர் முத்தை யனிடம் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டது. பாலக்கோட்டில் வட்டச் செயலா ளர் பி.கோவிந்தசாமி தலைமையில் மனு கொடுக்கம் இயக்கம் நடைபெற் றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.நாகராசன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் மற் றும் ராஜா, பாண்டியம்மாள், சந்திர சேகரன் உட்பட திரளானோர் 500க்கும் மேற்பட்ட மனுக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற இயக்கத் திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.பெருமாள், எம்.அசோகன், ந.வேலுசாமி, கே.தங்கமணி, சு.சுரேஷ், ஏ.டி.கண்ணன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் ஏ.சி.துரை, பி.செல்வராஜ், கு.சிவராஜ், கே.எஸ்.வெங்கடாசலம், வி.தேவராஜ், ஆர்.ரவி, எம்.ஆர்.முரு கேசன், ஜீ.பழனியம்மாள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற மனு கொடுக் கும் இயக்கத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிச்சாமி, ஆர். கோமதி, எஸ்.சுப்ரமணியன், சி.முரு கேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் பி.சுந்தரராஜன், என்.பாலசுப்பிர மணி, பி.ராஜா, பா.லலிதா மற்றும் ஆக் கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்பட்ட மக்கள் திரளானோர் கலந்து கொண்ட னர்.

;