districts

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

திருச்சிராப்பள்ளி, அக்.5 - வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக் கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்  கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து 30.9.2022 அன்றைய தேதி யில் ஐந்து வருடம் முடிவடைந்த, முறை யாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மேல்நிலை  வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவு தாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்த வரை, எழுதப் படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (பிளஸ்  2) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.9.2022 அன்றைய தேதியில்  ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். ஆதிதிராவிட மற்றும் பழங் குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.  அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை பெறு பவர்களாயின், அவர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதி யில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவ னத்திலும் பயிலுபவராக இருக்கக் கூடாது.  மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவு தாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடை யாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச்  சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை  ஆகியவற்றுடன் நேரில் வந்து, விண்ணப்பப்  படிவத்தை திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத் தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.  அலுவலகத்திற்கு வரும் பதிவுதாரர்கள் முகக்கவசம் அணிந்து வருவது மிகவும் அவசியமாகும்.  ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறி யியல் மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம்  போன்ற தொழிற்கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்ற உதவித் தொகை பெற தகுதியில்லை என திருச்சி  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.

;