districts

img

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் சிஐடியு திருவாரூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

மன்னார்குடி, அக்.10 - சிஐடியு-வின் திருவாரூர் மாவட்ட 9  ஆவது மாநாட்டின் பிரதிநிதிகள் மாநாடு  மன்னார்குடியில் மாவட்டத் தலைவர்  இரா.மாலதி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட துணைத்தலைவர் பி.நடராஜன் சிஐடியு செங்கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழு  தலைவர் ஏ.கோவிந்தராஜ் வர வேற்றார். மாநிலச் செயலாளர் எம்.மகா லட்சுமி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டீ.முருகையன் வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கையை யும், மாவட்ட பொருளாளர் எஸ்.வைத்தியநாதன் வரவு-செலவு அறிக் கையையும் முன்வைத்தனர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் எம்.சேகர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஆர்.குமாரராஜ் உள்ளிட்டோர்  வாழ்த்திப் பேசினர். மாவட்டத்தின் புதிய தலைவராக எம்.கே.என். அனிபா, மாவட்டச் செயலாளராக டி.முருகையன், மாவட்ட பொருளாள ராக இரா.மாலதி ஆகியோரை கொண்ட  புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட் டது.  புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில செயலாளர் ஆர்.மோகன் நிறைவுரையாற்றினார். வர வேற்புக்குழு பொருளாளர் அ.அரி கரன் நன்றி கூறினார்.  திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.  

மருத்துவமனையின் கட்டிடம் விரி வாக்கம் செய்யப்பட வேண்டும். குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் திருவாரூர் நகர புதிய பேருந்து நிலையத்தை உடனே சீர் செய்ய வேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள், கட்டு மானம், தையல் தொழிலாளர்கள், அங்கன்வாடி, டாஸ்மாக், உள்ளாட்சித் துறை ஊழியர்கள், தூய்மை பணியா ளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டி ஊழியர் களின் சங்கங்களை அழைத்து அவர்களது நீண்ட கால கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். திருவாரூர் மற்றும் மன்னார்குடி உழவர் சந்தைகள் டெல்டா மாவட்ட  சிறப்பு முன்னுரிமைகளை கொண்டுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவுத் திட்ட மான, மிகச்சிறந்த இந்த உழவர் சந்தை களின் இடவசதியை மேலும் விரி வாக்கம் செய்து, பேருந்து நிலையங்கள் அருகிலேயே தொடர்ந்து செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும். தஞ்சை -  நாகை என்எச்.67 தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி புதிய  சாலை அமைக்க வேண்டும். அனைத்து  கிராம சாலைகளையும் மேம்படுத்தி நகர்ப்புற சாலைகளோடு இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

;