districts

வணிகர் சங்க பேரமைப்பு முப்பெரும் விழா

பட்டுக்கோட்டை, டிச.24-  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், பட்டுக் கோட்டை நகர வணிக சங்க பேரமைப்பு சார்பில், இரண்டாம்  ஆண்டு துவக்க விழா, அடையாள அட்டை வழங்கும் விழா, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா  ஆகிய முப்பெரும் விழா  நடைபெற்றது. சட்ட ஆலோசகர் ராமசாமி வரவேற்றார். நகர பேரமைப்பு  தலைவர் வெங்கடேசன், கௌரவத் தலைவர் பழனியப்பன், ஒருங்கிணைப்பாளர் மலையப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா,  தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்  தலைவர் விக்கிரமராஜா நலத்திட்ட உதவிகள் வழங்கிய சிறப்புரை ஆற்றினார். இதில் 500க்கும் மேற்பட்ட வணி கர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தையல் மிஷின், அயர்ன் பாக்ஸ், சுமை  வண்டி உள்ளிட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டன.  மேலும், பட்டுக்கோட்டை நகரில் பாதாளச்சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும். காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு இரு முனைகளில் இருந்தும் பகல், இரவு நேர விரைவு ரயில்களை இயக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

;