districts

உயர்நீதிமன்றம் வளாகத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு

சென்னை, அக்.12-  சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். 48 வயதான இவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.   இவரது வீடு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால் அங்குள்ள வருவாய் அலுவ லகங்களுக்கு சென்று மனு செய்து முறையிட்டுள்ளார். ஆனால் மலைக்குறவன் இனத்தை சேர்ந்த வேல் முரு கனுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் காலம் தாழ்த்தி இழுத்தடித்து வந்துள்ளனர்.   இந்நிலையில் செவ்வா யன்று  மாலை அவர்  சென்னை உயர்நீதி மன்றம் வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவு  வாயில் அருகே சென்றார்.  மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி வேல்முரு கன் திடீரென தீக்குளித்தார். தீயில் எரிந்த நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் ஓடினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினர் தீயில் கருகிய வேல் முருகனை காப்பாற்ற முயன்றனர்.  இதில் உதவி ஆய்வாளர்  தினகரனுக்கும் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து படுகாயம் அடைந்த  வேல்முருகனை மீட்டு கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் புதனன்று  காலை 6 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர் பாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். வேல்முருகன் சாதி சான்றிதழுக்காக யார்  யாரையெல்லாம் சந்தித்து  பேசி உள்ளார்? எதற்காக  சாதி சான்றிதழ் கொடுக்கா மல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்? என்பது போன்ற கோணங்க ளில் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இதற் கிடையே தீக்குளித்த வேல்முருகன் உயிருக்கு போராடிய நிலையில் அளித்துள்ள வாக்குமூலம் வீடியோ சமூக வலைதளங்க ளில் பரவி வருகிறது. அதில்  மகனுக்கு சாதி சான்றிதழ்  கிடைக்காத காரணத்தினா லேயே தீக்குளித்தேன் என்று  அவர் கூறுவது பதிவாகி இருக்கிறது.

;