districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்: ஆதிக்க சாதியினர் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம், நவ. 26- தலித் வாலிபரை தாக்கிய ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, குடியரசு கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதின் போது, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி ஒன்றியம் உலகலாம் பூண்டி கிராமத்தை சேர்ந்த அருள்மொழி என்ற தலித் இளைஞர் கடந்த மாதம் 26ஆம் தேதி பூண்டி கிராமம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அங்கிருந்த ஆதிக்க சாதியை சேர்ந்த 6 பேர் அருள்மொழியிடம் என்ன ஊர் என்று விசாரித்துள்ளனர். அதற்கு  உலகலாம் பூண்டி சேரியிலிருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அப்போது சாதி குறித்து இழிவாகப் பேசி தாக்கியுள்ளனர். இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு அருள்மொழி சிகிச்சை பெற்றார். பின்னர், கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறையினர் நட வடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஏ.சங்கரன், இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவர் பி.சேகர் ஆகி யோர் செஞ்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தினர்.

அப்போதும் நடவடிக்கை யில்லை. பிறகு, காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ப.செல்வன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஏ.சங்கரன், மாவட்டச் செயலாளர் ஏ.கண்ண தாசன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், மாவட்டச் செய லாளர் சே.அறிவழகன், விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.டி.முருகன், மாவட்டத் தலைவர் ஆர்.தாண்ட வராயன், குடியசு கட்சித் தலைவர் பி.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே அங்கு வந்த காவல் துறையினர், வன்கொடுமை சட்டத்தின் கீழ் முதல் தகவல் பதிவு செய்து, நகலை நிர்வாகிகளிடம் கொடுத்தனர். மேலும் விரைந்து  கைது நடவடிக்கையிலும் ஈடுபடுவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனர்.

;