districts

img

ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி முகாம்

கடலூர், அக்.9- இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையும் மத்திய அறிவியல் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றக்குழுவும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 17 வயது உள்ள பள்ளி மாண வர்கள் பங்குபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தியது. இதன் ஒரு பகுதியாக  மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம்  வடலூரில் அமைந்துள்ள  வள்ளலார் குருகுல பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பால குருநாதன் தலைமை தாங்கி னார். வடலூர் கிளை தலை வர் தனகேசவ மூர்த்தி  வர வேற்புரையாற்றினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஸ்டீபன் நாதன் துவக்கி வைத்தார். மாவட்ட  செய லாளர் ஆர்.தாமோதரன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முனைவர் சுபத்திரா வாழ்த்தி பேசினர்.மாவட்ட கல்வி அதிகாரி  கார்த்திகேயன் நிறை வுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் உத யேன்திரன், நாராயண சாமி, செல்வராணி மற்றும்  ஆரோக்கிய தாஸ், ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் ஆசி ரியர்களுக்கு பயிற்சி வழங்கினர். ஒருங்கி ணைப்பாளர் லலிதா நிகழ்வை ஒருங்கி ணைத்தார்.இறுதியில் செயற்குழு உறுப்பினர்  எம்.பாலமுருகன் நன்றி கூறினார்.

;